என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Check for plastic items"

    • ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பெயரில் காட்பாடி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் சுஷ்மிதா மற்றும் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடித்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×