என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்காடு சாலை"

    • 6 டாஸ்மாக் கடைகள் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன
    • மதுக்கடைகளை மாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலுார்:

    வேலுார் மாநகரில் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் மது அருந்தும் கும்பல், அந்தவழியாக செல்பவர்களிடம் போதையில் கலாட்டா செய்வதும் வாடிக்கையா கிவிட்டது.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் இனிமேல் பொது இடங்களில், மக்களுக்கு இடையூறாக மது அருந்திவிட்டு தகராறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    வேலுாரில், ஆற்காடு சாலையில் மட்டும் மொத்தம் 6 டாஸ்மாக் கடைகள் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன. இதனால், இப்பகுதியில், மாலை 6 மணிக்கு மேல் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிடுகிறது.

    டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிவிட்டு சாலையோரத்தில் உள்ள கடைகள், விடுதிகள்,காலி இடங்கள் என எல்லா இடங்களிலும் சாவகாசமாக அமர்ந்து குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர்.

    இதனால், அப்பகுதி வழியாக மக்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது. மேலும், இப்பகுதிகளில் பெரும்பாலும் சி.எம்.சி-க்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தவர் அதிகளவில் தங்கியுள்ளனர். குடிபோதையில் அவர்களை தாக்குவது, பெண்களை கேலி செய்வதும் அதிகரித்து விட்டது.

    குறிப்பாக, 'எலைட்" எனப்ப டும் வெளிநாட்டு மது வகைகளை விற்பனை செய்யும் கடைக்கு அருகே உள்ள வீடுகளின் வாசல் பகுதிகள் எல்லாம் இரவு 7 மணிக்கு மேல் குடிகா ரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால், பலர் வீட்டையே காலி செய்து சென்றுவிட்டனர்.

    இதை கட்டுப்படுத்த போலீசார் இப்பகுதியில் கட்டாய ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் அல்லது குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்த் உள்ளனர்.

    ×