என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், ரவுடிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர். அதன்படி நேற்று வேலூர் சின்னஅல்லாபுரத்தை சேர்ந்த சிவாவை (வயது 23) பாகாயம் போலீசாரும், வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தைச் சேர்ந்த பொன்முடி (50), ஓல்டுடவுனை சேர்ந்த ராமச்சந்திரன் (37) ஆகியோரையும், அரியூர் போலீசார் அணைக்கட்டு தாலுகா புலிமேட்டை சேர்ந்த பிரகாசையும் (27) கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரசின் பரவல் கடந்த சில நாட்களாக அதிகமாகி கொண்டே செல்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் 10-க்கும் குறைவான நபர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    நேற்றைய பரிசோதனை முடிவில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 31 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பாமக சார்பில் முன்னாள் எம்எல்ஏ-வும், திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ-வும் நேருக்குநேர் எதிர்கொள்ளும் ஆற்காடு தொகுதி கண்ணோட்டம்.
    அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் கே.எல். இளவழகன் திமுக சார்பில் ஜே.எல். ஈஸ்வரப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் புதிய விடுதலை கட்சி சார்பில் முகமது ரபி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரா. கதிரவன், அமமுக சார்பிலா் ஜனார்த்தனன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பா.ம.க. வேட்பாளர் இளவழகன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,20,000
    2. அசையும் சொத்து- ரூ. 17,92,544 
    3. அசையா சொத்து- ரூ. 46,00,000

    திமுக வேட்பாளர் ஜே.எல். ஈஸ்வரப்பன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 3,25,000
    2. அசையும் சொத்து- ரூ. 5,11,13,619
    3. அசையா சொத்து- ரூ. 2,81,15,000

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் ஆற்காடு ஆகும். நவாப்களின் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. வாணிபத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆங்கிலேயப் படை தளபதி ராபர்ட் கிளைவ் இந்தியாவில் முதன்முதலில் கைப்பற்றிய பகுதி ஆற்காடு ஆகும்.

    ஆற்காடு நகரை சுற்றியுள்ள பச்சைக்கல் மசூதி, ராஜா ராணி குளங்கள், சோழர் காலத்தில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவை ஆற்காடு நகரின் பழமையை எடுத்து காட்டுபவையாக உள்ளன. ஆற்காட்டின் பிரதான சின்னமாக டெல்லிகேட் விளங்கி வருகிறது. டெல்லியில் ஆட்சியை பிடிப்பதற்கு அடையாளமாக இந்த டெல்லி கேட்டை வெள்ளைக்காரர்கள் அமைத்தார்கள் என்று கூறுகின்றனர்.

    ஆர்க் எனப்படும் அத்தி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் ஆற்காடு என பெயர் வந்ததாகவும், ஆற்காட்டை சுற்றி ஆறு காடுகள் இருந்ததால் ஆற்காடு என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் முன்பு ஆற்காடும் அடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரித்திர ரீதியாகவும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றது ஆற்காடு சட்டமன்ற தொகுதி.

    கிச்சிலி சம்பா அரிசி

    ஆற்காடு பிரியாணியும், புகழ்பெற்ற இனிப்பு வகையான மக்கன் பேடாவும் சிறப்பு பெற்றது. ஆற்காடு கிச்சிலி சம்பா அரிசி ஆற்காடு தொகுதிக்கு பெருமை சேர்க்கிறது.கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் தொடங்கி ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழகத்தில் அதிக தூரம் பாய்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலில் கலக்கும் பாலாற்றில் ஆற்காடு அருகே புதுப்பாடியில் அணை கட்டப்பட்டுள்ளது.

    பாலாற்றின் குறுக்கே தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் அணை இதுவாகும். ஆற்காடு தொகுதியில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மேலும் சில பகுதிகளில் நெசவுத்தொழிலும், பீடி சுற்றும் தொழிலும் உள்ளன. இங்கு விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

    ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகளும், விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன. மேலும் ஆற்காடு ஒன்றியத்தில் 25 ஊராட்சிகளும், திமிரி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், கணியம்பாடி ஒன்றியத்தில் கணியம்பாடி, மூஞ்சூர்பட்டு, துத்திப்பட்டு, சாத்துமதுரை, நெல்வாய், கனிகனியான், வேப்பம்பட்டு, பாலாத்துவண்ணான், நஞ்சுகொண்டாபுரம், கத்தாழம்பட்டு, வல்லம், கீழ்பள்ளிப்பட்டு, மேட்டுபாளையம், கம்மசமுத்திரம், மோத்தக்கல், கம்மவான்பேட்டை, சலமநத்தம் ஆகிய 18 ஊராட்சிகளும், வேலூர் ஒன்றியத்தில் பாலமதி ஊராட்சியும், வேலூர் மாநகராட்சி பகுதியில் இடையன்சாத்தும் அடங்கியுள்ளன. பெரும்பாலும் கிராம பகுதிகள் நிறைந்துள்ள தொகுதி ஆற்காடு தொகுதி ஆகும்.

    இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், முதலியார், யாதவர்கள், நாயுடு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர்.

    மொத்த வாக்காளர்கள் 2,60,135 பேர், ஆண்கள் 1,26,652 பேர், பெண்கள் 1,33,475 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர் உள்ளனர்.

    தொடர்ந்து 2 முறை வெற்றி

    1967 மற்றும் 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆற்காடு நா.வீராசாமி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து 1967-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரங்கநாத நாயக்கரும், 1971-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எத்திராஜுலு நாயுடுவும் தோல்வி அடைந்தனர். 1977, 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஜெ. உய்யகொண்டான், ஏ.எம்.சேதுராமன், த.பழனி ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள்.

    1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் டி.ஆர். கஜபதியும், அ.தி.மு.க. ஜெயலலிதா அணி சார்பில் கே.வி. ராமதாசும் போட்டியிட்டனர். இதில் கஜபதி வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஜி.விசுவநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஆற்காடு தொகுதி

    1996-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.என். சுப்பிரமணியனும், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ப.நீலகண்டனும், 2006-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் போட்டியிட்ட கே.எல். இளவழகனும் வெற்றி பெற்றனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வி.கே.ஆர். சீனிவாசன் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஜெ.எல். ஈஸ்வரப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    மேம்பாலம் அமைக்க வேண்டும்

    ஆற்காடு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆற்காடு அருகே காவனூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலில் இருந்து தவிர்க்க ஆற்காடு நகரத்தில் இருந்து ஆரணிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

    ஆற்காடு தொகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ. அமைக்க வேண்டும். ஆற்காடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தேர்தல் வெற்றி

    1951- பஞ்சாட்சரம்- காங்கிரஸ்
    1957- காதர்ஷெரீப்- காங்கிரஸ்
    1962- முனிரத்தினம்- தி.மு.க.
    1967- ஆற்காடு வீராசாமி- தி.மு.க.
    1971- ஆற்காடு வீராசாமி- தி.மு.க.
    1977- உய்யகொண்டான்- அ.தி.மு.க.
    1980- சேதுராமன்- அ.தி.மு.க.
    1984- பழனி- அ.தி.மு.க.
    1989- கஜபதி- தி.மு.க.
    1991- விசுவநாதன்- அ.தி.மு.க.
    1996- சுப்பிரமணி- தி.மு.க.
    2001- நீலகண்டன்- அ.தி.மு.க.
    2006- இளவழகன்- பா.ம.க.
    2011- சீனிவாசன்- அ.தி.மு.க.
    2016- ஈஸ்வரப்பன்- தி.மு.க.

    2016 தேர்தல்

    ஈஸ்வரப்பன்- தி.மு.க.- 84,182
    ராமதாஸ்- அ.தி.மு.க.- 73,091
    கரிகாலன்- பா.ம.க.- 35,043
    உதயகுமார்- ம.தி.மு.க.- 5,387
    அருள்ராமன்- பா.ஜ.க.- 2,648
    முருகானந்தம்- சுயே- 406
    சகுந்தலா- சுயே- 359
    முனுசுவாமி- எல்ஜேபி- 272
    நோட்டா- 2,004
    ஆற்காடு தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டை கொண்டு வருவேன் என பா.ம.க.வேட்பாளர் கே.எல்.இளவழகன் வாக்குறுதி அளித்தார்.
    ஆற்காடு:

    ஆற்காடு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க.வை சேர்ந்த கே.எல்.இளவழகன் போட்டியிடுகிறார். அவர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

    நேற்று ஆற்காடு தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் கலவை கூட்டுரோடு, கணியந்தாங்கல், அல்லாலச்சேரி, நாகலேரி, சென்னலேரி, பரிக்கல்பட்டு, சென்னசமுத்திரம், மாந்தாங்கல், மேல்நெல்லி, மருதம், இருங்கூர், தட்டச்சேரி, கண்ணிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வேன் மூலமாகவும் நடந்து சென்றும் வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘‘ நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இப்பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். மேலும் ஆரூர்- பொன்னம்பலம் இடையே தரைப்பாலம் உள்ளது .மழைக்காலங்களில் இந்த தரைப்பாலத்திற்கு மேல் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் நடந்தோ அல்லது வாகனம் மூலமோ செல்வதற்கு சிரமமாக உள்ளது. அதனை போக்க மேம்பாலம் கட்ட ஆவண செய்வேன்.

    மேலும் இப்பகுதியில் ஏழை மாணவர்கள் படித்து பயன்பெற அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட தொழிற்பேட்டை கொண்டு வருவேன். இப்பகுதியிலுள்ள ஏரி, குளங்கள் தூர்வாரி விவசாய உற்பத்தியை பெருக்க பாடுபடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் சொரையூர் குமார் (திமிரி கிழக்கு), ந.வ கிருஷ்ணன் (தாமரைப்பாக்கம் மேற்கு), வளவனூர் அன்பழகன் (ஆற்காடு கிழக்கு)ஒன்றிய அவைத்தலைவர் ரங்கநாதன், ஆற்காடு நகர செயலாளர் சங்கர், பா.ம.க.வை சேர்ந்த மாநில நிர்வாகியும் ஆற்காடு தொகுதி பொறுப்பாளருமான எம்.கே.முரளி, மாவட்ட செயலாளர் சண்முகம், நிர்வாகி மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், சுரேஷ், விக்ரமன், பா.ஜ.க.வை சேர்ந்த மனோகரன், பிரேம மாலதி, ஜெயலலிதா , ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் உள்பட 4 மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொருத்த 7 ஆயிரம் வெப் கேமராக்கள் தயார் நிலையில் உள்ளன.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் உள்ளன. எனவே அங்கு வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பயன்படுத்த 7 ஆயிரம் வெப் கேமராக்கள் வேலூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டு அங்கு டேட்டா கார்டு, சிம் கார்டு, வெப் கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இதனைக் கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு அன்று ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வெப் கேமரா மூலம் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

    தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடிகளில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குடியாத்தம் தொகுதியில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மையம் அமைத்து தருவதாக அதிமுக வேட்பாளர் பரிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
    பேரணாம்பட்டு:

    குடியாத்தம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.பரிதா நேற்று பேரணாம்பட்டு நகரில் நகர அ.தி.மு.க.செயலாளர் சீனிவாசன் தலைமையில் கொளுத்தும் வெயிலில் லால் மசூதி வீதி, பஜார் வீதி, சின்ன பஜார் வீதி, சாலைப்பேட்டை, காமராஜர் நகர், இஸ்லாமியா பள்ளி வீதி, ரஹமதாபாத், தாதாவீதி, மவுலா வீதி உள்ளிட்ட இடங்களில் வீதி, வீதியாக சென்று பொதுமக்கள், இஸ்லாமியர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்்.

    பின்னர் மதியம் பஜார் வீதியில் உள்ள சவுக் மசூதியில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், நான் எம்.எல்.ஏ. வாக வெற்றி பெற்றால் சிறுபான்மை மாணவர்களுக்கு ‘நீட்’ மற்றும் அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க சிறப்பு பயிற்சி மையம் உருவாக்கப்படும். தரைக்காடு அரசு உருது வழி பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும். அங்கு உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பின்னர் மோர்தானா கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் பொகளூர் பிரபாகரன், சிவா, ஒன்றிய அவைத்தலைவர் ரவி, நகர துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட பிரதிநிதிகள் திருமால், தேசமுத்து, பொதுக்குழு உறுப்பினர் முத்து சுப்பிரமணி, பொருளாளர் ஆனந்தன், நகர இணைச் செயலாளர் துர்கா சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
    பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற முயன்ற எலக்ட்ரீஷியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சதா (வயது 32) எலெக்ட்ரீஷியன். பெங்களூவில் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (30). இவர்கள் இருவரும் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். நேமிகா (10) என்ற மகளும், தர்ஷாந்த் (7) என்ற மகனும் உள்ளனர்.

    சதா பெங்களூருவிலிருந்து கடந்த 23-ந் தேதி வந்து தனது மகள் நேமிகா பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சதா மது அருந்திவிட்டு மனைவி மல்லிகாவுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த மல்லிகா, விவசாய நிலத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த கணவன் சதா மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். மல்லிகாவுக்கு ஓரளவு நீச்சல் தெரிந்ததால் கிணற்றிலுள்ள கல்லை பிடித்து தத்தளித்தார். ஆனால் அவரை காப்பாற்ற குதித்த கணவன் சதா தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கணவன், மனைவி இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    அப்போது சதா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மல்லிகா சிகிச்சைபெற்று வருகிறார்.

    இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கேசவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவள்ளுவர் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும் என்று துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்குறுதி அளித்தார்.
    வேலூர்:

    காட்பாடி தொகுதி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. பொது செயலாளருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர், திருவள்ளுவர் நகர், பழைய காட்பாடி, மதிநகர், கோபாலபுரம், வெள்ளைகல்மேடு, அருப்புமேடு, திருநகர், கழிஞ்சூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    முன்னதாக காட்பாடி எம்.ஜி.ஆர். நகர் பள்ளிவாசலில் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது ெபாதுமக்கள் மாலை அணிவித்து, மலர்தூவி, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அப்போது அவர் பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்ெகாண்டார்.

    மேலும் அந்தந்த பகுதிக்கு செய்த திட்டங்கள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், ரேஷன் கடைகள், அங்கன்வாடி கட்டிடம், சமுதாய கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தார்சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அந்த திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். திருவள்ளுவர் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும் என்றார்.

    முன்னதாக காட்பாடி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

    தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பகுதி செயலாளர் வன்னியராஜா, சுனில்குமார், தேர்தல் பணிக்குழு செயலாளர் வி.எஸ்.விஜய், சிவசங்கரன், மாநகர வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ரங்கராஜன், வெல்லமண்டி ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக என்றும் இருப்பது தி.மு.க. தான் என அணைக்கட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது விதவைப் பெண் ஒருவர் தனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால் தனது மகன், மகளுடன் கஷ்டப்படுவதாக தெரிவித்தார். அவரை தனது வாகனத்தில் ஏற்றி குறைகளை கேட்டறிந்த நந்தகுமார் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பின்னர் கலைவாணி என்ற பெண் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும், சத்துணவு உதவியாளர் பணி தனக்கு வழங்காமல், ரூ.4 லட்சம் வாங்கிக் கொண்டு வேறு ஒரு பெண்ணுக்கு வழங்கி விட்டதாகவும் கூறினார். இதனைக் கேட்ட அவர், கணவரை இழந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடம் லஞ்சம் கேட்கிறார்கள். இது தான் அ.தி.மு.க. அரசு. இதற்கெல்லாம் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் முடிவு கட்டப்படும். அணைக்கட்டு தொகுதியில் லஞ்சம் வாங்காமல் அனைவருக்கும் வேலை வாங்கி கொடுப்பேன் என்றார்.

    தொடர்ந்து பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் உங்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது என்றுமே தி.மு.க. தான் என்றார்.

    பிரசாரத்தின்போது ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு, குமரபாண்டியன், பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜாகீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் கோட்டி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொரோனா விழிப்புணர்வு பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொரோனா விழிப்புணர்வு பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் சோளிங்கர் என்.ரவி மேற்பார்வையில் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் சோளிங்கர் உள்பட வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா பரவாமல் தடுப்பது குறித்தும், தடுப்பூசி தவறாமல் செலுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

    மூத்த குடிமக்கள் அரசு மருத்துவமனை செலுத்தும் கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்.

    வெளியில் செல்லும்போதும், பேசும்போதும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்திய முக கவசங்கள் மற்றும் கைக்குட்டைகளை நன்றாக தூய்மைப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

    தொடர் சளி, காய்ச்சல், ஜலதோ‌ஷம், உடல் சோர்வு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பின் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரை அணுகவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரஜினி அரசியலுக்கு வருவார். ஓட்டு கேட்டு வீடு தோறும் செல்லலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் ரஜினி அரசியலுக்கு வராததால் தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து வருகின்றனர்.

    ரஜினி அரசியலுக்கு வராதது ஏமாற்றத்தை தந்தாலும் கொரோனா விழிப்புணர்வு மனநிறைவை தருவதாக ரஜினி ரசிகர்கள் கூறினர்.
    ஒடுகத்தூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட சென்ற கூலித்தொழிலாளி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தார். அவர், சுட்டுக் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த ஆசனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரின் மகன் வெங்கடேசன் (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 14 மாதங்கள் ஆகிறது. மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். வெங்கடேசன் மற்றும் அவரின் பெற்றோர் கிராமம் அருேக காட்டுப்பகுதியையொட்டி உள்ள அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை தான் வைத்திருந்த உரிமமில்லா கள்ள நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக மலைப் பகுதிக்குச் சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.

    ேநற்று அதிகாலை 5.30 மணியளவில் காட்டில் துப்பாக்கி வெடித்த சத்தம் ஒலித்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும், வெங்கடேசனின் பெற்றோரும், உறவினர்களும் சம்பவ இடத்தை நோக்கி ஓடினர். அப்போது ஒரு நிலத்தின் அருகே பள்ளத்தில் கழுத்தில் குண்டுகள் பாய்ந்த நிலையில் வெங்கடேசன் துப்பாக்கியுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். வெங்கடேசனின் உடலை கைப்பற்றி வீட்டுக்குக் கொண்டு வந்து, போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன் றனர். ஆனால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கள்ள நாட்டுத்துப்பாக்கியை எடுத்து, அருகில் உள்ள ஆற்றில் வீசி விட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தினர், ஊர் பொதுமக்களிடம் வெங்கடேசன் இரவில் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது, தடுமாறி விழுந்ததில் கழுத்தில் குச்சி குத்தி இறந்து விட்டதாகக் கூறி பொய்யான தகவலை பரப்பினர்.

    இந்தத் தகவலை கேள்விப்பட்ட வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் வேலூர் துைண போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெங்கடேசனின் கழுத்தில் நாட்டுத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது தெரிய வந்தது. அவரின் பிணத்தை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெங்கடேசன் குடும்பப் பிரச்சினையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசனின் கள்ள நாட்டுத்துப்பாக்கி அருகில் உள்ள ஆற்றில் வீசப்பட்டுக் கிடந்ததைப் போலீசார் கண்டு பிடித்து மீட்டனர்.
    மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தபால் ஓட்டு போட்டனர். அவர்களின் வீட்டுக்கே சென்று 52 குழுக்கள் வாக்கு சேகரித்தனர்.
    வேலூர்:

    சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்கள் அவர்களின் வசதிக்காக இந்த தேர்தலில் தபால் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சென்று தபால் ஓட்டு போட விருப்பமா? என கேட்டறிந்தனர். அதில் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தபால் ஓட்டுபோட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 முதல் 15 குழுக்கள் வரை என மாவட்டம் முழுவதும் 52 குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவில் தேர்தல் அதிகாரிகள், போலீசார் இடம் பெற்றிருந்தனர்.

    அக்குழுவினர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள், 80 வயது நிரம்பியவர்கள் என மொத்தம் 3,160 பேரின் வீடுகளுக்கு நேற்று சென்றனர். வீட்டில் இருந்தவர்களிடம் தபால் வாக்கு பெற்று கவரில் வைத்து, அதை பெரிய உறை கவரில் வைத்து மூடினர். இவ்வாறு பெறப்பட்ட தபால் வாக்குகள் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பான முறையில் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டது.

    நேற்றைய தினத்தில் தபால் வாக்கு செலுத்த தவறியவர்களை இக்குழுவினர் மற்றொரு நாளில் சந்திப்பார்கள். அன்று அவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். அன்றும் அவர்கள் தபால் வாக்கு செலுத்த தவறினால் அவர்கள் வாக்கு செலுத்த முடியாது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×