என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. வேட்பாளர் பரிதா மசூதியில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
    X
    அ.தி.மு.க. வேட்பாளர் பரிதா மசூதியில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.

    ‘நீட்’ தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மையம் அமைப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர் பரிதா வாக்குறுதி

    குடியாத்தம் தொகுதியில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மையம் அமைத்து தருவதாக அதிமுக வேட்பாளர் பரிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
    பேரணாம்பட்டு:

    குடியாத்தம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.பரிதா நேற்று பேரணாம்பட்டு நகரில் நகர அ.தி.மு.க.செயலாளர் சீனிவாசன் தலைமையில் கொளுத்தும் வெயிலில் லால் மசூதி வீதி, பஜார் வீதி, சின்ன பஜார் வீதி, சாலைப்பேட்டை, காமராஜர் நகர், இஸ்லாமியா பள்ளி வீதி, ரஹமதாபாத், தாதாவீதி, மவுலா வீதி உள்ளிட்ட இடங்களில் வீதி, வீதியாக சென்று பொதுமக்கள், இஸ்லாமியர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்்.

    பின்னர் மதியம் பஜார் வீதியில் உள்ள சவுக் மசூதியில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், நான் எம்.எல்.ஏ. வாக வெற்றி பெற்றால் சிறுபான்மை மாணவர்களுக்கு ‘நீட்’ மற்றும் அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க சிறப்பு பயிற்சி மையம் உருவாக்கப்படும். தரைக்காடு அரசு உருது வழி பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும். அங்கு உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பின்னர் மோர்தானா கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் பொகளூர் பிரபாகரன், சிவா, ஒன்றிய அவைத்தலைவர் ரவி, நகர துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட பிரதிநிதிகள் திருமால், தேசமுத்து, பொதுக்குழு உறுப்பினர் முத்து சுப்பிரமணி, பொருளாளர் ஆனந்தன், நகர இணைச் செயலாளர் துர்கா சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×