என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடி திருவள்ளுவர் நகரில் துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்ததை படத்தில் காணலாம்.
    X
    காட்பாடி திருவள்ளுவர் நகரில் துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்ததை படத்தில் காணலாம்.

    திருவள்ளுவர் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும் - துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்குறுதி

    திருவள்ளுவர் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும் என்று துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்குறுதி அளித்தார்.
    வேலூர்:

    காட்பாடி தொகுதி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. பொது செயலாளருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர், திருவள்ளுவர் நகர், பழைய காட்பாடி, மதிநகர், கோபாலபுரம், வெள்ளைகல்மேடு, அருப்புமேடு, திருநகர், கழிஞ்சூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    முன்னதாக காட்பாடி எம்.ஜி.ஆர். நகர் பள்ளிவாசலில் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது ெபாதுமக்கள் மாலை அணிவித்து, மலர்தூவி, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அப்போது அவர் பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்ெகாண்டார்.

    மேலும் அந்தந்த பகுதிக்கு செய்த திட்டங்கள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், ரேஷன் கடைகள், அங்கன்வாடி கட்டிடம், சமுதாய கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தார்சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அந்த திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். திருவள்ளுவர் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும் என்றார்.

    முன்னதாக காட்பாடி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

    தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பகுதி செயலாளர் வன்னியராஜா, சுனில்குமார், தேர்தல் பணிக்குழு செயலாளர் வி.எஸ்.விஜய், சிவசங்கரன், மாநகர வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ரங்கராஜன், வெல்லமண்டி ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×