என் மலர்
வேலூர்
- மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
- நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்:
மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் காஞ்சிபுரத்தி லுள்ள நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி அவ்வை நகரில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.சங்கர், கு.மொழிமாறன், ஜி.வேலு, கைத்தறி சங்க பணியாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலத்தைச் சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு தசராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தசராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
- அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை.
வேலூர்:
வேலூர் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த டிப்பர் லாரி திருடிய வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திர்கி (வயது 36) கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிகண்டன் (52) ஆகியோரை வேலூர் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் 700 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.
மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை. இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட திட்டமிட்டனர்.
இருவரும் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மும்பையில் இருந்து ஒரு காரை திருடிக்கொண்டு பெங்களூரு வழியாக வேலூர் வந்தனர்.
அப்போது, செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் சத்துவாச்சாரியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்றதுடன் ஆற்காடு அருகே லாரியின் ஜி.பி.எஸ் கருவியை அகற்றிவிட்டு நம்பர் பிளேட்டையும் மாற்றினர்.
கர்நாடக மாநிலத்தில் பாஸ்டேக் ஸ்டிக்கரை எந்த ஆவணங்கள் இல்லாமல் வாங்க முடியும் என்பதால் முன்கூட்டியே தமிழக பதிவெண் கொண்ட வாகன நம்பருக்கு அவர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கியுள்ளனர்.
அந்த பாஸ்டேக் எண்ணை லாரியில் ஒட்டிக்கொண்டு காரைக்கால் வரை சென்றனர். பின்னர் லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.2.50 லட்சத்துக்கு விற்றனர். அந்தப்பணத்தில் லாட்ஜூகளில் அறை எடுத்து தங்கி மது குடித்து விட்டு உல்லாசமாக இருந்தனர். மும்பையில் இருந்து திருடி வந்த காரிலேயே அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்றனர். செல்லும் வழியில் திருட்டு பணத்தில் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.
மும்பை காரை கொல்கத்தாவில் விற்றனர். பின்னர் கொல்கத்தாவில் வேறு ஒரு காரை மீண்டும் திருடிக்கொண்டு தமிழகம் வந்தனர். ஓசூரில் தங்கி அடுத்த கட்ட திருட்டுக்கு திட்டம் தீட்டியுள்ளனர். அந்த நேரத்தில் வேலூர் தனிப்படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் இருவரும் வாகனங்களை திருடி அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததை தெரிவித்துள்ளனர்.
இருவரையும் போலீசார் வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14246 ஹெக்டேர் பயிரிடப்பட்டது.
- 40 சதவீதம் அளவு நீரை சேமிக்கலாம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-22 ம் வருடம் சொர்ணவாரி காரீப் பருவத்தில் சுமார் 2200 ஹெக்டேர் நெல், சிறுதானியங்கள் சுமார் 3708 ஹெக்டேர். பயறுவகை 7702 ஹெக்டேர். மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 14246 ஹெக்டேர் பயிரிடப்பட்டது.
சொர்ணவாரி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பயன்படுத்தி சாகுபடி செய்தால் 40 சதவீதம் அளவு நீரை சேமிக்கலாம். நெல் சாகுபடி செய்துள்ள வரப்புகளில் பயறுவகை பயிர் விதைகளை நடவு செய்தால் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.
கூடுதல் வருமானம் கிடைக்கும். வரப்புகளில் உள்ள பயறுவகை பயிர்களில் உள்ள சாறு உறுஞ்சும் பூச்சியை உண்பதற்காக வரும் வண்டு மற்றும் ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் நெல் பயிரை தாக்கக்கூடிய குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு மற்றும் புகையான் பூச்சிகளையும் உண்பதால் நெல் பயிருக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செலவினம் குறையும். தற்போது சொர்ணவாரி பருவத்தில் சாகுபடிக்கு தேவையான ஏற்ற ரகங்களான ஏடிடீ 37,42 கோ 51 சான்றுநிலை நெல் விதைகள், 15 மெட்ரிக் டன்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் தவிர சிறுதானியங்கள் 7 மெட்ரிக் டன், பயறுவகை விதைகள் 15 மெட்ரிக் டன், நிலக்கடலை விதைகள் 40 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வரப்பு பயிருக்கு தேவையான அனைத்து விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மான்யத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து பயிர்சாகுபடிக்கு தேவையான நுண்ணுட்ட மற்றும் உயிர் உரங்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுபொருட்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே வேலூர் மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- புதிய பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு மு.க.ஸ்டாலின் வருகை
- உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
வேலூர்:
வேலூரில் வருகிற 21-ந் தேதி புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனையொட்டி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் அரியூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது;-
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு சிலரை நான் நேரில் வாழ்த்தியிருக்கிறேன்.தற்போது ஒட்டுமொத்தமாக அனைவரையும் பார்க்க வேண்டும்.வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் எதிரிகள் கழகத் துரோகிகளை சமாளித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது சாதாரணமானது அல்ல.நீங்கள் வெற்றி பெற்ற பகுதி வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான செயலில் ஈடுபட வேண்டும்.
தமிழக அளவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பெரிய மாநாட்டை நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டு ஆட்சியில்ரூ.7 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்று விட்டார்கள். இந்த கடன் சுமையுடன் ஆட்சி பீடத்தில் மு க ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். நிதி கஷ்டத்தை மக்களிடத்தில் கூற முடியாது.
நிதியை சமாளிப்பது எப்படி என்று கருணா நிதியின் மகனுக்கு தெரியும். பல்வேறு இடங்களில் மனு கொடுத்த மக்கள் எதுவும் நிறைவேறாமல் முதல்அமைச்சர் வருகையின்போதாவது விமர்சனம் கிடைக்குமா என்ற நோக்கத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் அதிக அளவில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன்.
56 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அதற்கு அடுத்தபடியாக 53 ஆண்டுகள் நான் சட்டசபையிலேயே இருக்கிறேன். நிதியில் கரை கண்டவர் கருணாநிதி. அவரது மகன் கூர்ந்த மதி நுட்பத்தால் ஆட்சி தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா வந்தது. ஊசி போடுவதற்கு அதிக செலவாகிவிட்டது. வெள்ளம் வந்து எல்லாத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. தற்போதும் வெள்ள நிவாரண நிதி வழங்கி கொண்டிருக்கிறோம்.
ஆட்சியில் நிதிநிலையில் சரியாக நடத்திக் கொண்டிருப்பவர் மு.க. ஸ்டாலின்.
திராவிடர் கழகம் மற்றும் திமுகவிற்கு உயிரோட்டம் கொடுத்தது வேலூர் மாவட்டம்தான்.
நிதி ஆதாரம் இருந்தால் 95 சதவீத மனுக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்க முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யின்போது வழிநெடுகிலும் நின்று அவரை பிரமாண்டமாக வரவேற்க வேண்டும்.எந்த காரணத்தைக் கொண்டும் கொடி பேனர்கள் தோரணங்கள் கட்டக்கூடாது. மலர்களை தூவி கோஷத்துடன் வரவேற்க வேண்டும்.
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் மற்றும் கூட்டுறவு திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.சூசகமாக சொல்கிறேன். விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி, எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாடு மேய்க்க தாயுடன் சென்ற போது பரிதாபம்
- ஆழமான பகுதியில் சிக்கினான்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள பண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் இவரது மனைவி ஆஷா இவர்கள் மாடுகளை மேய்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை ஆஷா தனது 2வது மகன் அபிஷேக் (வயது 9), 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். அபிஷேக் மற்றும் உறவினர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள குட்லவாரிபல்லி ஏரிக்கரை பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அபிஷேக் சிறுமியுடன் ஏரிக்கரை ஓரம் தண்ணீரில் இறங்கி உள்ளார். அப்போது ஆழமான பகுதியில் சிறுவன் சிக்கிக்கொண்டான்.
இதனை கண்ட அவரது தாயார் ஆஷா கூச்சலிட வே கிராம மக்கள் விரைந்து வந்து ஏரியில் இறங்கி சிறுவனை மீட்டனர். உடனடியாக பரதராமியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அபிஷேக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண் காந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசார் விசாரணை
- போக்சோவில் வாலிபர் கைது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் வயது 17, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இந்நிலையில் கூலித் தொழிலாளியின் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அந்தப் பெண்ணின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை அடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 லாரி, வேன் சிக்கியது
- கும்பல் தப்பி ஓட்டம்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகொண்டா-ஆம்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் பதுக்கி வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வந்த தொடர்புகளின் பேரில் ரேசன் அரிசி கடத்தல் லாரிகளை தொடர்ந்து கண்காணித்து பிடிக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிகொண்டா- ஆம்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அகரம்சேரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் இரவு நேரத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் கடத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் குடியாத்தம் தாசில்தார் லலிதா, குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று இரவு குறிப்பிட்ட அந்த பார்க்கிங் பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வருவாய் துறையினரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. அங்கு சரக்கு ஆட்டோ, மினி லாரி மூலம் ரேசன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட பெரிய லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உதவி கலெக்டர் தனஞ்செயன் பெரிய மற்றும் சிறிய லாரிகள் என மூன்றையும் பறிமுதல் செய்து குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். மொத்தம் 473 முட்டைகளில் 23 டன் ரேசன் அரிசி இருந்தது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் ரேசன் அரிசி கடத்தலில் பிடிபட்ட லாரிகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியிலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் பள்ளிகொண்டா பகுதியில் ரேசன் அரிசி பறிமுதல் செய்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒருவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி, மற்றொருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
- வேலூர் சத்துவாச்சாரியில் திருடுபோன லாரியை நாமக்கல்லில் மீட்டனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த மாதம் 18-ந் தேதி இரவு லாரி ஒன்று திருடு போனது.
இதனை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சத்துவாச்சாரி மற்றும் மாநகர பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேர் ஒரு காரில் வந்து லாரியை திருடுவது தெரியவந்தது. அந்தக் கார் வேலூரிலிருந்து எங்கு சென்றது என்பதை அறிவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யத் தொடங்கினர்.
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், விருதாச்சலம், ஜெயங்கொண்டம், கும்பகோணம், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய இடங்கள் வழியாக 700 கிலோ மீட்டர் வரை சென்றது தெரியவந்தது. சுமார் 550-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது குற்றவாளிகளை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மூலமாக செல்போன்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் குற்றவாளிகள் செல்போன் எண் கிடைத்தது. அவர்களில் ஒருவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி, மற்றொருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
இவர்கள் மீது 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
ஓசூரில் பதுங்கி இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வேலூர் சத்துவாச்சாரியில் திருடுபோன லாரியை நாமக்கல்லில் மீட்டனர்.
கைதான 2 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- வேலூர் ஓல்டுடவுன் எம்ஜிஆர் நகர் செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.
- முன்னா மனைவி குறித்து மணிகண்டன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
வேலூர்:
வேலூர் ஓல்டுடவுன் எம்ஜிஆர் நகர் செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த முன்னா என்கிற அகேஷா (37) இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
நேற்று காலை முன்னா, மணிகண்டனை அழைத்து கொண்டு பெரியார் பூங்காவிற்கு சென்றார். அங்குள்ள குடிநீர் தொட்டி அருகே அமர்ந்து இருவரும் மது குடித்தனர்.
அப்போது முன்னா மனைவி குறித்து மணிகண்டன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்னா மணிகண்டனை கீழே தள்ளி அவர் மீது பெரிய கல்லை தூக்கிப் போட்டார்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முன்னா என்கிற அகேஷாவை கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலூர் ஜெயிலில் கைதிகள் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர்.
- ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
வேலூர்:
வேலூர் ஜெயிலில் கைதிகள் கஞ்சா செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர்.
சிறைக்காவலர்கள் சோதனையில் கைதிகளின் கழிவறைகள் மற்றும் பூங்கா பகுதியில் மறைத்து வைக்கப்படும் கஞ்சா செல்போன் பறிமுதல் செய்யபடுகிறது.
இந்த நிலையில் ஜெயிலில் தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தி வருவது தெரியவந்தது. நேற்று கைதிகள் அறையில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பேட்டரி ஆகியவற்றை ஜெயில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனையும் மீறி கஞ்சா செல்போன் ஆகியவை எப்படி வந்தது என்ற சந்தேகம் ஏற்பட்டது.
சிறையில் காவலர்கள் உதவி இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே வர முடியாது என்பதால் இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது வேலூர் ஜெயிலில் பணியாற்றிவரும் முதன்மை ஏட்டு விஜயகுமார் என்பவர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஏட்டு விஜயகுமாரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு உத்தரவிட்டார். ஏட்டு விஜயகுமார் இதுவரை எவ்வளவு கஞ்சா சப்ளை செய்துள்ளார்.செல்போன் சப்ளை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு
- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்த் குமார் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில்குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் வருகிற 21-ந் தேதி வேலூர் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்க வேலூருக்கு வருகைதரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு பணி களுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்வது, மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு கவசங்கள் வாங்குவது எனவும்,
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிக்காக புதிதாக 60 எந்திரங்கள் வாங்குவது.
மாநகராட்சியில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களுக்கு புதிதாக ரூ.10 லட்சம் மதிப்பில் பேட்டரிகள் வாங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






