என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலுதவி சிகிச்சை அளித்தும் பயனில்லை"

    • மாடு மேய்க்க தாயுடன் சென்ற போது பரிதாபம்
    • ஆழமான பகுதியில் சிக்கினான்



    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள பண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் இவரது மனைவி ஆஷா இவர்கள் மாடுகளை மேய்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை ஆஷா தனது 2வது மகன் அபிஷேக் (வயது 9), 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். அபிஷேக் மற்றும் உறவினர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள குட்லவாரிபல்லி ஏரிக்கரை பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அபிஷேக் சிறுமியுடன் ஏரிக்கரை ஓரம் தண்ணீரில் இறங்கி உள்ளார். அப்போது ஆழமான பகுதியில் சிறுவன் சிக்கிக்கொண்டான்.

    இதனை கண்ட அவரது தாயார் ஆஷா கூச்சலிட வே கிராம மக்கள் விரைந்து வந்து ஏரியில் இறங்கி சிறுவனை மீட்டனர். உடனடியாக பரதராமியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அபிஷேக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண் காந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×