என் மலர்
நீங்கள் தேடியது "Daughter of a mercenary"
- போலீசார் விசாரணை
- போக்சோவில் வாலிபர் கைது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் வயது 17, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இந்நிலையில் கூலித் தொழிலாளியின் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அந்தப் பெண்ணின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை அடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






