என் மலர்
வேலூர்
- மேடை அமைப்பது குறித்து ஆலோசனை நடந்தது
- அணைக்கட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு அருகே உள்ள மூலை கேட் பகுதியில் நடைபெற உள்ளது.இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்க ப்பட உள்ளது.இந்த இடத்தை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ பி நந்தகுமார் எம்எல்ஏ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது மேடை அமைப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன் கோ.குமாரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- போதையில் அட்டூழியம்
- 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
வேலூரை அடுத்த பெருமுகை ஆட்டோ நகர் வழியாக நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த பாஞ்சாலி, தணிகாசலம் ஆகியோர் அங்கு ஓடி சென்று 4 பேரையும் தூக்கி விட்டு உதவி செய்தனர்.
அதற்கு 4 வாலிபர்களும் எங்களை எப்படி தூக்கி விடலாம் என்று கூறி பாஞ்சாலி, தணிகா சலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென 4 பேரும் சேர்ந்து சரமாரியாக அவர்களை தாக்கினர்.
இதில், தணிகாசலத்தின் தலையிலும், பாஞ்சாலியின் கைவிரலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 4 பேரையும் பிடித்து அடித்து உதைத்தனர்.பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 வாலிபர்களும் போதை யில் இருந்ததாகவும், அதனால் தான் உதவி செய்த பெண் உள்பட 2 பேரையும் தாக்கினார்கள்.
விபத்தில் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டவர்கள் மீது இப்படி தாக்கினால் எப்படி அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் வரும்.அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.
குடிபோதையில் தாக்கிய ஒருவர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த மற்ற 3 பேர் யார் என்று தெரியவில்லை.
4 பேரையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- மின் கட்டணம் வந்து சேரவில்லை என கூறி மோசடி
- ஆன்லைனில் பணம் கட்டுபவர்கள் எச்சரிக்கை
வேலூர்:
காட்பாடியில் கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இ ணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி ஏமாற்றி நூதனமுறையில் ஓய்வுப்பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் ரூ.4 லட்சத்தை மர்மநபர் அபேஸ் செய்தார்.
காட்பாடி தாலுகா பாரதிநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 66). இவர் வேலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பாண்டியன் செல்போ னுக்கு நேற்று முன்தினம் ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில், கடந்த 2 மாதத்துக்கான வீட்டு மின்கட்டணம் இதுவரை செலுத்தவில்லை. அதனை உடனடியாக செலுத்தா விட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதுதொடர்பாக மின்அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என்று செல்போன் எண் பதிவி டப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பாண்டியன், கடந்த 2 மாதத்துக்கான மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டேன் என்று கூறினார்.
மறுமுனையில் பேசிய மர்மநபர் சர்வர் பிரச்சினை காரணமாக ஆன்லைனில் செலுத்திய மின்கட்டணம் மின்சார வாரியத்தின் கணக்கில் சேரவில்லை. சிறிதுநேரத்தில் மின்கட்டணம் செலுத்தா விட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும்.
அந்த பணத்தை செல்போன் செயலி (ஆப்) மூலம் செலுத்தும்படி கூறி உள்ளார். மேலும் அந்த செயலிக்கான இணைப்பை (லிங்) பாண்டியன் செல்போனுக்கு மர்மநபர் அனுப்பினார்.
முதற்கட்டமாக அந்த செயலி செயல்படுவதற்கு ரூ.10 ரீசார்ஜ் செய்யும்படியும், பின்னர் மின்கட்டணம் செலுத்தும்ப டியும் தெரிவித்தார்.
ரூ.4 லட்சம் அபேஸ்
அதையடுத்து பாண்டியன் அந்த செயலிக்கு ரூ.10 ரீசார்ஜ் செய்தார். அதையடுத்து சிறிதுநேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் வைத்திருந்த ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 999ஐ 2 தவணைகளில் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார்.
அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் பாண்டியனுக்கு மர்மநபர் நூதனமுறையில் ஆன்லைனில் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரித்தார். அதில், பாண்டியன் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் ஒருவரின் கிரெடிட் கார்டுக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவலை நம்பி ஆதார், பான்கார்டு எண், வங்கி கணக்கு எண், ஓ.டி.பி. உள்ளிட்டவற்றை தெரிவித்து பணத்தை இழக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
- என் குப்பை என் பொறுப்பு என வாசகம்
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி சார்பில் செதுக்கரை பகுதியில் உள்ள செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜோசப்மோசஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் த.புவியரசி, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் ஜெபமணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறு வயது முதலேயும், பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே வீடுகள் மற்றும் பொது இடங்கள், பள்ளிகளில் குப்பைகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது குறித்தும் தான் உபயோகிக்கும் பொருட்கள் பொது இடங்களில் வீசுவதை தவிர்த்து அதற்கான குப்பை தொட்டியில் போடுவது குறித்தும் அப்பழக்கம் தொடர்ந்து வரவேண்டும் எனவும் குடியாத்தம் நகரை தூய்மையான நகராக மாற்ற மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதேபோல் மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் தூய்மையாக வைத்துக் கொண்டு என் குப்பை என் பொறுப்பு என நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்கள் தூய்மையான நகரம் அதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பென்னி, சிவக்குமார் தூய்மை பாரத மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.
- ரூ.14 லட்சம் ஒதுக்கீடு
- பூவைஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பல ஆண்டு பொதுமக்கள் கோரிக்கை ஏற்று புதிதாக ரேசன் கடை கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. 14 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.
இந்த ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடையின் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினருமான பி. மேகநாதன், அக்கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மு.ஆ.சத்யனார், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், ஜி.பி.மூர்த்தி, கே.மோகன், பிரகாசம், ஜான்சன் உள்பட அ.தி.மு.க., புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.
- சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் டயர்கள் புதையும்படி சாலை அமைக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதில் பேரி காளியம்மன் கோவில் பகுதியில் பழுதாகி நிறுத்தப்பட்ட பைக்கை அகற்றாமல் அதன் டயர்கள் மேல் சிமெண்ட் கலவைகள் பதிந்தவாறு சாலை போடப்பட்டது.
இதே போல சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் டயர்கள் புதையும்படி சாலை அமைக்கப்பட்டது.
இது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்தில் மேயர் சுஜாதா ஆனந்த குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். பைக் மற்றும் ஜூப்பை அகற்றிவிட்டு அங்கு சாலை அமைக்க உத்தரவிட்டனர்.
இந்த 2 பணிகளுக்கும் பொறுப்பாளராக இருந்த 3-வது மண்டல உதவி என்ஜினியர் பழனி சஸ்பெண்டு செய்யட்டுள்ளார். சத்துவாச்சாரி கணபதி நகர் பூங்கா அருகே சாலையில் நடு பகுதியில் மின் கம்பம் அமைந்துள்ளது. அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி குறித்து தெரியாதவர்கள் யாராவது இரவு நேரத்தில் பைக்கில் வந்தால் அவர்கள் நேரடியாக மின்கம்பத்தில் மோதி பெரும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
இதேபோல பல இடங்களில் மின் கம்பங்கள் அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் இந்த பணியை செய்த தனியார் நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிக்க தனியார் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற என்ஜினியர்களைக் கொண்ட திட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால் தற்போது நடந்த சாலை பணிகளை பார்க்கும்போது இவர்கள் எந்த அளவுக்கு கண்காணித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த திட்ட கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டு புதிய ஆட்களை நியமிக்க தனியார் நிறுவனத்திற்கு கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாநகராட்சி பகுதியில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை போடப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
- அப்போது சதீஷ்குமார் அங்கு வந்தார். அவர் மாணவியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20). வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார்.
ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக பழகினர். இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது சதீஷ்குமார் அங்கு வந்தார். அவர் மாணவியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மாணவியை மீட்டு முதலுதவி அளித்தனர். மேலும் மாணவர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரையும் மடக்கி பிடித்தனர்.
இது குறித்த தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவர் சதீஷ்குமார் கூறியதாவது:-
நானும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்தோம். திடீரென அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசுகிறார். அவர் அந்த மாணவரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி நான் கேட்டபோது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் மாணவியை கத்தியால் குத்தினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று காலையில் திருவலம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது
- 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தி.மு.க. அரசை கண்டித்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கார்த்தியாயினி பங்கேற்று பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், வணிக பிரிவு மாநில செயலாளர் இளங்கோ, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பிச்சாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாபு, ஜெகன், மகேஷ்.மாவட்ட பொருளாளர் தீபக் மாவட்ட நிர்வாகிகள் சரவணன், மணி, யுவராணி, சுகுணா.லோகேஷ், சுகுமார். செல்வி.சாந்தி, வேலூர் மாநகர் மண்டல தலைவர்கள் யுவராஜ் சிவக்குமார், சிவா.ரவி.சுரேஷ், சரவணன், நாகராஜ், சத்திஷ், மற்றும் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- 466 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
- ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
வேலூர்.ஜூலை.5-
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, தகுதியுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, வேலுார் மாவட்டத்தில் 78 இடைநிலை ஆசிரியர்கள், 328 பட்டதாரி ஆசிரி யர்கள், 60 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 466 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி, வேலுார் கலெக்டர் அலுவலகம் பி பிளாக் 3- வது மாடி யில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவல கத்தில் நடந்து வருகிறது. முதல்நாளான நேற்று இடைநிலை ஆசிரியருக்கு 88 பேர், பட்டதாரி ஆசிரியருக்கு 213 பேர், முதுகலை ஆசிரியருக்கு 100 பேர் என மொத் தம் 401 பேர், தங்களின் விண்ணப்பங்களை வழங்கினர். இன்று நூற்றுக்கணக்கானோர் தங்களின் விண்ணப்பங்களுடன் குவிந்தனர். தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்று தனித்தனி யாக விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஊழி யர்கள் ஈடுபட்டனர்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் வழங்க வந்ததால் மாவட்ட கல்வி அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
- கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் புற்று கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் நவீன் (வயது 25).எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த நவீன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அவரது குடும்பத்தினர் அழுது துடித்தனர்.சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோகினி, தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
- நண்பர்களுக்கு 2 கார் தேவை என்று மேலும் ரூ.10 லட்சத்தை சந்துருவின் வங்கிக்கணக்கில் தினேஷ்குமார் செலுத்தினார்.
வேலூர்:
திருவள்ளூர் மாவட்டம் சுங்கவார்சத்திரத்தை சேர்ந்தவர் ரோகினி (வயது32). இவருக்கு கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரை சேர்ந்த வியாபாரி தினேஷ்குமார் அறிமுகமானார்.
அப்போது ரோகினி, தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் போலீசாரால் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறேன்.
எனவே வாகனங்கள் ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம். பிற இடங்களை விட குறைந்த விலையில் வாகனங்கள் தருகிறேன் என்று தினேஷ்குமாரிடம் கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய அவர் முதற்கட்டமாக 2 கார்கள் வேண்டும் என ரூ.2 லட்சத்தை ரோகினியிடமும், ரூ.12 லட்சத்தை அவருடைய கணவர் சந்துருவின் வங்கிக்கணக்கிலும் செலுத்தி உள்ளார்.
சில நாட்களுக்கு பின்னர் நண்பர்களுக்கு 2 கார் தேவை என்று மேலும் ரூ.10 லட்சத்தை சந்துருவின் வங்கிக்கணக்கில் தினேஷ்குமார் செலுத்தினார். சில வாரங்கள் ஆகியும் ரோகினி கூறியபடி கார்களை கொடுக்காமலும், உரிய பதில் தெரிவிக்காமலும் காலம் கடத்தி வந்தார்.
இதுகுறித்து தினேஷ்குமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ரோகினி சப்-இன்ஸ்பெக்டர் என்று நடித்து வாகனங்கள் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதும், அதற்கு அவருடைய கணவர் சந்துரு உடந்தையாக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரோகினியை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
அவருடைய கணவர் சென்னை துண்டலம் திரு.வி.க. நகரை சேர்ந்த சந்துருவை (45) போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சந்துருவை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- கனரக லாரிகளுக்கு அனுமதி இல்லை
வேலூர் :
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 3 இணைப்புகளில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் வகையில் ரப்பர் பேடு இரும்புச் சட்டம் கம்பிகள் பொருத்தப்பட்டன.
அதோடு இணைப்பை உறுதி செய்யும் வகையில் அந்த பகுதியில் கெமிக்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பேக்கிங் செய்யப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் கடந்த 18-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இணைப்பு பகுதியில் செய்யப்பட்ட பணிகள் செட் ஆவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரெயில்வே பாலத்தின் மீது கனரக வாகனங்களை இயக்கி சோதனை செய்தனர்.
அப்போது இதற்கு முன்னர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது ஏற்பட்ட அதிர்வுகள் சீரமைக்கும் பணி முடிந்த பிறகு ஏற்படவில்லை. அதோடு போக்குவரத்துக்கும் பாலம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1-ந் தேதி முதல் ரெயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை முதல் ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
காட்பாடி ரெயில்வே பாலத்தில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.சாதாரண வாகனங்கள் இந்த பாலத்தில் எப்போதும் போல் செல்லலாம்.
தற்போது கனரக சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை.சரக்கு வாகனங்கள் இயக்குவது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்காலிக பாதைகளில் கனரக லாரிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் 300 படுக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரியிலும் படுக்கைகளை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.






