search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temporary teaching job"

    • விண்ணப்பம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலுார் மாவட்டத்தில் ஆதிதிராவி டர் நலத்துறை கீழ் செயல்படும் தொடக் கப்பள்ளிகளில் ஓராசியர் பள்ளிகளில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்களை 7,500 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது.

    பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

    செட்டிக்குப்பம், கத்தாழம்பட்டு, சேக்கனூர், சத்துவாச்சாரி, பென்னாத்தூர் ஆர்.வெங்கடாபுரம், வெட்டுவாணம், கம்மசமுத்திரம், கீழுர், கவசம்பட்டு, கே.வி.குப்பம், காட்டுபுத்தூர், சோழவரம் ஆகிய தொடக்கப்பள்ளி களில் இடை நிலை ஆசிரியர் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது.

    வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியா கவோ அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • 466 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
    • ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    வேலூர்.ஜூலை.5-

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.

    இதற்காக, தகுதியுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    அதன்படி, வேலுார் மாவட்டத்தில் 78 இடைநிலை ஆசிரியர்கள், 328 பட்டதாரி ஆசிரி யர்கள், 60 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 466 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி, வேலுார் கலெக்டர் அலுவலகம் பி பிளாக் 3- வது மாடி யில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவல கத்தில் நடந்து வருகிறது. முதல்நாளான நேற்று இடைநிலை ஆசிரியருக்கு 88 பேர், பட்டதாரி ஆசிரியருக்கு 213 பேர், முதுகலை ஆசிரியருக்கு 100 பேர் என மொத் தம் 401 பேர், தங்களின் விண்ணப்பங்களை வழங்கினர். இன்று நூற்றுக்கணக்கானோர் தங்களின் விண்ணப்பங்களுடன் குவிந்தனர். தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்று தனித்தனி யாக விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஊழி யர்கள் ஈடுபட்டனர்.

    தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் வழங்க வந்ததால் மாவட்ட கல்வி அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ‌

    ×