என் மலர்
வேலூர்
- வேலூர் கோட்டையில் வெடித்த முதல் இந்திய சுதந்திரப் போர்
- ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு மரியாதை
வேலூர்:
வேலூர் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்! வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் புரட்சி நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்தப் புரட்சி சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது.
வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் வாரிசு களும், உறவினர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். கோட்டையை வெள்ளைக்கார சிப்பாய்களும் அவர்களுக்கு கட்டுப்பட்ட இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். இந்தியச் சிப்பாய்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடங்குவர்.
இந்நிலையில், வெள்ளையரை போரில் வென்று மீண்டும் திப்புசுல்தானின் வாரிசுகளை மைசூர் அரியணையில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர் திப்பு சுல்தான் குடும்பத்துக்கு விசுவாசமான முகம்மதியர்கள்.
அதனால் பக்கீர்களைப் போல வேடமிட்டு கிராமம் கிராமமாகச் சென்று பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டி வந்தனர்.
இந்தச் சமயத்தில்தான் சென்னை மாநில ஆங்கிலேய படை தளபதி ஜான் ரடாக் என்பவர் சிப்பாய்களுக்கு புதிய தோல் தொப்பியை அறிமுகப்படுத்தினார். அது மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக்கொழுப்பு பூசப்பட்டது என்று இந்து சிப்பாய்களும் பன்றித் தோலால் செய்யப்பட்டது என்று முஸ்லிம் சிப்பாய்களும் அந்த ஆணைக்கு கட்டுப்பட மறுத்தனர்.
அத்துடன் வீரர்கள் நெற்றியில் விபூதி, நாமம் தரிக்கக் கூடாது, மீசையை ஒரே அளவாக வெட்டிக்கொள்ள வேண்டும், தாடி வளர்க்காமல் ஒட்ட மழிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது.
தங்களைக் மதம் மாற்றவே இந்த முயற்சிகள் என்று சிப்பாய்கள் கருதினர். திப்பு சுல்தானின் மகன்கள் படேல் ஹைதர், இளவரசர்கள் அப்துல் தாலிக், மொகைதீன், மைசுல்தீன், முகமதுயாசில், முகமதுசுபான், ஷேக்கர் அல்லா, சிராசுதீன், இமாலுதீன் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர்.
அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் அரச குடும்பத்தின் பணியாளர்களைப் போல் வேடமிட்டு, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் இரவு 2 மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். புரட்சியில் சிறு பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. சில அதிகாரிகள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர்.
பிறகு புரட்சியாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். வெடிமருந்து தயாரிப்புக் கிடங்கும் அவர்கள் வசமானது. கட்டாய தலைப்பாகையை அமுல்படுத்திய கர்னல் மிக்கிராஸும் சுட்டுக் கொல்லப்பட்டார். இளவரசர்களும் அவர்களது பணியாட்களும் புரட்சியாளர்களுக்கு இனிப்புகளையும் பானங்களையும் வழங்கினர்.வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் புலிக்கொடியை ஏற்றினர்.
அந்தச் சமயத்தில் புரட்சியாளர்களும் இளவரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களும் கோட்டையிலிருந்த கஜானாவை உடைத்துக் கொள்ளையடிக்க முற்பட்டனர். இதில் புரட்சியாளர்களின் கவனம் சிதறியது. அதற்குள் சென்னையிலிருந்தும் வேறு ஊர்களிலிருந்தும் ஆங்கிலப் படைகள் வந்து கோட்டையை மீண்டும் கைப்பற்றின. ஏராளமான புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புரட்சிப் படை வீரர்களோடு அப்பாவி களும் கொல்லப்பட்டனர். அன்று மட்டும் வெள்ளை ஏகாதிபத்தியப் படை கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியது. 600 பேர் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றனர்.
இந்த வேலூர் புரட்சி தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டது.
வீரத்தின் அடையாளமாக வேலூர் கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வேலூர் கோட்டை அருகே முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் சிப்பாய் புரட்சி நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் வேலூர் கோட்டை அருகே உள்ள நினைவுத்தூணுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு சிப்பாய் புரட்சி நினைவு தினம் நாளை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்துவோம்.
- அண்ணாமலை,எல்.முருகன் பங்கேற்பு
- முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது
வேலூர்:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் நாளை சனிக்கிழமை மற்றும் 10-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை , வேலூர் , அரப்பாக்கம் , ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
நாளை காலை 10 மணிக்கு முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. மதியம் மாநில செயற்குழு கூட்டம் தொடங்குகிறது.
மறுநாள் காலையில் தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை , ஐ.பி.எஸ் தலைமை தாங்குகிறார். மத்திய மந்திரி டாக்டர் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார்.
மாநில பொறுப்பாளர்கள் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில அணி பிரிவு , தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
வேலூர் மாவட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என வேலூர் மாவட்ட பா.ஜ.க ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.எல்.என். மோகன் தெரிவித்துள்ளார்.
- வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாக 123 மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது
- இன்று தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது
வேலூர்:
விஐடி பல்கலை க்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில்(2022) பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் கல்வியாண்டில் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாக 123 மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது.
(30-06-22 முதல் 06-07-22 வரை) கணினி முறையில் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். விஐடி மாணவர்களை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது மற்றும் சேர்க்கை உறுதி செய்ய அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குகிறது. சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 2 வது வாரத்தில் தொடங்கும்.
விஐடியின் நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இன்று தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
ரேங்க் 1 முதல் 1,00,000 வரை எடுத்த மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திரபிரதேசம், மற்றும் போபாலில் இடம் கிடைக்கும்.
1,00,000 க்கும் மேலாக ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டும் தான் இடம் கிடைக்கும்.
ஜி.வி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி (Scholarship under GV School Development Programme) மத்திய,மாநில கல்வி வாரியம் நடத்தும் +2 தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெற்றவர்களுக்கு விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 1 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1000 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 1 மாணவருக்கும் 1 மாணிவிக்கும் விஐடியில் 100 சதவித கல்வி கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.
- அதிகாரிகள் சோதனை செய்தனர்
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ராஜேஷ், சிவமணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன் ஆகியோர் இன்று காலை வேலூர் கோட்டை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர்கள் பரிசோதனை செய்த போது மீன்களின் செதில்கள் கருப்பு நிறத்தில் மாறி கெட்டுப் போய் இருந்தது. மேலும் தடை செய்யப்பட்ட அணை மீன்களும் விற்பனைக்கு வைத்திருந்தனர். அந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த கடைகளிலும் கெட்டுப்போன மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.மார்க்கெட் மற்றும் சத்துவாச்சாரி என 2 பகுதிகளிலும் மொத்தம் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்தனர்.
அதனை பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும் கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் மீன் மார்க்கெட் மற்றும் வேலூரில் உள்ள அனைத்து மின்கடைகளிலும் இந்த சோதனை நடத்தப்படும்.இதில் கெட்டுப்போன மீன்கள் இருப்பது தெரிய வந்தால் வியாபாரிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் மார்க்கெட் மற்றும் சத்துவாச்சாரி பகுதியில் அசைவப் பிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் அதிகாரிகள் 50 கிலோ கேட்டு போன மீன்களை பறிமுதல் செய்திருப்பது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது போன்ற மீன் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- வீட்டுமனை பட்டா உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
- கழிவு நீர் கால்வாயை சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்திற்கு நேற்று மாலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வருகை தந்தார். அப்போது கதிர்குளம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க கோரிக்கை தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து ஆய்வின் போது உடனிருந்து முன்னோடி வங்கி மேலாளரிடம் அவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் கடன் வழங்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அந்த கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகளிடம் உரையாடினார். 100 நாள் வேலை மற்றும் வீட்டுமனை பட்டா ஆகியவற்றை உடனடியாக செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து குடியாத்தம்-பரதராமி நெடுஞ்சாலையில் கல்லப்பாடி கிராமம் அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சாலையை ஒட்டியபடி அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாய்கள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது கழிவு நீர் கால்வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லுமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும் என அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ். தனஞ்செயன், குடியாத்தம் தாசில்தார் எஸ்.லலிதா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், உதவி பொறியாளர் என். ராஜ்குமார், கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உடன் இருந்தனர்.
- வேலூர் வேலப்பாடி ஆரணி சாலையில் பிரபலமான சுவீட் கடை ஒன்று உள்ளது.
- கடையில் இருந்த சில்லரைக் காசுகளை துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தினந்தோறும் தினுசு தினுசாக திட்டமிட்டு பல்வேறு விதங்களில் கொள்ளையை அரங்கேற்றி வருகின்றனர்.
வீடு மற்றும் கடைகளில் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பல் அங்குள்ள விலை உயர்ந்த நகை மற்றும் கட்டு கட்டாக பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன.
ஆனால் வேலூரில் ஒரு கடையில் இருந்த சில்லறை காசு மூட்டைகளை கும்பல் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் வேலப்பாடி ஆரணி சாலையில் பிரபலமான சுவீட் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் ஷட்டர் கதவை உடைத்து கொள்ளை கும்பல் உள்ளே புகுந்தனர். கடையில் கட்டு கட்டாக பணம் மற்றும் விலைவு உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை.
ஆனால் வாடிக்கையாளர்க ளிடமிருந்து வசூலான 1,2,5 ரூபாய் நாணயங்கள் என சில்லரை காசுகளை மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனர். மொத்தம் 14 மூட்டைகளில் ரூ.1.25 லட்சம் சில்லரை காசுகளை கட்டி வைத்திருந்தனர்.
கடைக்குள் புகுந்த கும்பல் எதுவும் கிடைக்காததால் சில்லறை காசு மூட்டைகளை தூக்கிச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதன்படி 14 மூட்டைகளையும் கடைக்கு வெளியே கொண்டு வந்து வாகனம் மூலம் எடுத்துச் சென்று விட்டனர்.
காலையில் கடைக்கு வந்த ஊழியர்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆரணி ரோடு மற்றும் சுவீட் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில் கும்பல் சில்லறை காசு மூட்டைகளை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதன் மூலம் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 மூட்டை சில்லரை காசுகளை எங்கே சென்று மாற்ற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடையில் இருந்த சில்லரைக் காசுகளை துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எம்.பி. கதிர் ஆனந்த் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- விழாவில் ஏராமானோர் கலந்துகொண்டனர்.
வேலூர்:
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளிமலையில் தமிழக அரசின் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட உள்ளது.
இந்த ஆண்டு வள்ளிமலை அரசு பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று தொடங்கப்பட்டது.
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தார்.
இந்த கல்லூரியானது வள்ளிமலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் முதற்கட்டமாக செயல்படவுள்ளது. இதில் பிகாம், பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.சி, உள்ளிட்ட இளங்கலை வகுப்புகள் முதற்கட்டமாக நடக்கவுள்ளது. வள்ளிமலை அரசு பள்ளியில் முதல் அமைச்சர் கலைக்கல்லூ ரியை தொடங்கி வைத்த பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன் மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர் சதீஷ்குமார்பாச்சி, சுகாதார அலுவலர்கள் லூர்துசாமி, சிவக்குமார், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் கொண்ட துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து கை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கை கழுவுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 3552 காவலர் காலி பணியிடங்கள் வெளியீடு
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நேரடியாக வருகிற 27.07.2022 முதல் நடத்தப்படவுள்ளது.
இந்த அறிவிக்கையில் 3552 காவலர் பணியிடங்கள் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படவுள்ளது (ஆண்கள் / பொது 2890 பணியிடங்களும், பெண்கள் 662 பணியிடங்களும்) இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் நேரடியாக வேலைவாய்ப்புத்துறை சார்பில் சிறந்த பயிற்சி வல்லுனர்களால் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும், http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயரினை முன்பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காட்பாடி ரெயிலில் 24 கிலோ கஞ்சா சிக்கியது
- போலீசார் விசாரணை
வேலூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா பகுதியில் நடத்தப்படும் சோதனை காரணமாக அந்த வழியாக கடத்தல் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஆலங்காயம், அணைக்கட்டு ரோடு வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் வேலூர் அருகே உள்ள அரியூர் ரெண்டேரி கொடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 33 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தன.
அதனை வேனுடன் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தி வந்த 2 பேரை அரியூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் சீட்டுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்காயம், அணைக்கட்டு ரோடு வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- குட்கா கடத்தி வந்த 2 பேரை அரியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
வேலூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா பகுதியில் நடத்தப்படும் சோதனை காரணமாக அந்த வழியாக கடத்தல் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஆலங்காயம், அணைக்கட்டு ரோடு வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் வேலூர் அருகே உள்ள அரியூர் ரெண்டேரி கொடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 33 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தன.
அதனை வேனுடன் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தி வந்த 2 பேரை அரியூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் சீட்டுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்
- வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு உறுதிமொழி
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் செல்வி தலைமை தாங்கி விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினார். அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் தற்காலத்தில் கொள்வது குறித்து விளக்கி பேசினார்.
பின்னர் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதி மொழியை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை முதல்வர் கவுரி வெலிங்கண்ட்லா, குடியிருப்பு மருத்துவர் இன்பராஜ் மற்றும் சமூக மருத்துவ துறை டாக்டர் பாலாஜி, மணிமேகலை, நர்சுகள்,தூய்மை பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
காய்ச்சல் இருந்தால் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்க்கான லெப்டோஸ்பைரோசிஸ் , ஸ்கரப்டைபஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். நாய் , பூனை போன்ற விலங்குகள் கடிக்கும்போது வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொள்ள வேண்டும் .
கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கொசுவலை மற்றும் கொசுவிரட்டிகளை உபயோகப்படுத்த வேண்டும்.
வீட்டிலும் மற்றம் சுற்றுப்புறத்திலும் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
ஸ்கரப்டைபஸ் மற்றும் குரங்குகாய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் பொருட்டு தகுந்த பாதுகாப்பின்றி காடுகளில் நுழைவதையும், தகுந்த பாதுகாப்பின்றி புதர் மற்றும் புல்வெளிகளில் ஓய்வு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.






