என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A meeting of managers is going on"

    • அண்ணாமலை,எல்.முருகன் பங்கேற்பு
    • முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது

    வேலூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் நாளை சனிக்கிழமை மற்றும் 10-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை , வேலூர் , அரப்பாக்கம் , ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    நாளை காலை 10 மணிக்கு முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. மதியம் மாநில செயற்குழு கூட்டம் தொடங்குகிறது.

    மறுநாள் காலையில் தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை , ஐ.பி.எஸ் தலைமை தாங்குகிறார். மத்திய மந்திரி டாக்டர் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார்.

    மாநில பொறுப்பாளர்கள் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில அணி பிரிவு , தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

    வேலூர் மாவட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என வேலூர் மாவட்ட பா.ஜ.க ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.எல்.என். மோகன் தெரிவித்துள்ளார்.

    ×