என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 2 வது வாரத்தில் தொடங்கும்"

    • வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாக 123 மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது
    • இன்று தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது

    வேலூர்:

    விஐடி பல்கலை க்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில்(2022) பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    2022 ஆம் கல்வியாண்டில் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாக 123 மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது.

    (30-06-22 முதல் 06-07-22 வரை) கணினி முறையில் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். விஐடி மாணவர்களை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது மற்றும் சேர்க்கை உறுதி செய்ய அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குகிறது. சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 2 வது வாரத்தில் தொடங்கும்.

    விஐடியின் நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இன்று தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

    ரேங்க் 1 முதல் 1,00,000 வரை எடுத்த மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திரபிரதேசம், மற்றும் போபாலில் இடம் கிடைக்கும்.

    1,00,000 க்கும் மேலாக ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டும் தான் இடம் கிடைக்கும்.

    ஜி.வி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி (Scholarship under GV School Development Programme) மத்திய,மாநில கல்வி வாரியம் நடத்தும் +2 தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெற்றவர்களுக்கு விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 1 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1000 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 1 மாணவருக்கும் 1 மாணிவிக்கும் விஐடியில் 100 சதவித கல்வி கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.

    ×