என் மலர்
நீங்கள் தேடியது "கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்த வியாபாரிகள்"
- அதிகாரிகள் சோதனை செய்தனர்
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ராஜேஷ், சிவமணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன் ஆகியோர் இன்று காலை வேலூர் கோட்டை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர்கள் பரிசோதனை செய்த போது மீன்களின் செதில்கள் கருப்பு நிறத்தில் மாறி கெட்டுப் போய் இருந்தது. மேலும் தடை செய்யப்பட்ட அணை மீன்களும் விற்பனைக்கு வைத்திருந்தனர். அந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த கடைகளிலும் கெட்டுப்போன மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.மார்க்கெட் மற்றும் சத்துவாச்சாரி என 2 பகுதிகளிலும் மொத்தம் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்தனர்.
அதனை பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும் கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் மீன் மார்க்கெட் மற்றும் வேலூரில் உள்ள அனைத்து மின்கடைகளிலும் இந்த சோதனை நடத்தப்படும்.இதில் கெட்டுப்போன மீன்கள் இருப்பது தெரிய வந்தால் வியாபாரிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் மார்க்கெட் மற்றும் சத்துவாச்சாரி பகுதியில் அசைவப் பிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் அதிகாரிகள் 50 கிலோ கேட்டு போன மீன்களை பறிமுதல் செய்திருப்பது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது போன்ற மீன் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






