search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அடுத்த ஆர்.கிருஷ்ணாபுரத்தில் புதிய ரேசன் கடை கட்ட பூமி பூஜை
    X

    குடியாத்தம் அடுத்த ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜையை பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    குடியாத்தம் அடுத்த ஆர்.கிருஷ்ணாபுரத்தில் புதிய ரேசன் கடை கட்ட பூமி பூஜை

    • ரூ.14 லட்சம் ஒதுக்கீடு
    • பூவைஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பல ஆண்டு பொதுமக்கள் கோரிக்கை ஏற்று புதிதாக ரேசன் கடை கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. 14 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.

    இந்த ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடையின் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினருமான பி. மேகநாதன், அக்கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மு.ஆ.சத்யனார், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், ஜி.பி.மூர்த்தி, கே.மோகன், பிரகாசம், ஜான்சன் உள்பட அ.தி.மு.க., புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×