என் மலர்tooltip icon

    வேலூர்

    • வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் கூடுதலாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை காவேரிப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்த கூடியது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆலங்காயம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.திருப்பத்தூர் நகர பகுதியில் லேசான மழை பெய்தது. பலத்த மழை காரணமாக கானறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர் 13.5,காட்பாடி 30.1, மேல் ஆலத்தூர் 3.8, திருவலம் 2 ,குடியாத்தம்4. 2, திருப்பத்தூர் 34, ஜோலார்பேட்டை 39, நாட்டறம்பள்ளி 29 ,ஆம்பூர் 3.2, வாணியம்பாடி 37 ,ஆலங்காயம் 53.8, வாலாஜா 6.4, அரக்கோணம் 1.2, காவேரிப்பாக்கம் 25, கலவை 45.8 சோளிங்கர் 39.

    • வேன் டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி
    • வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

    வேலூர்:

    வேலூர் செதுவாலை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சொந்தமாக மினி வேனில் தனியார் நிறுவனத்தில் பால் சப்ளை செய்து வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு இவர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பாலை சப்ளை செய்துவிட்டு இலவம்பாடி அருகே உள்ள வடக்கு மேடு மண் ரோட்டில் இரவு சென்று கொண்டிருந்தார்‌.

    அப்போது 3 பேர் அவரை மடக்கி கத்தியால் வெட்டி 2 செல்போன் மற்றும் ரூ.450 பணத்தை பறிமுதல் செய்தனர்‌.

    மேலும் அவர் ஓட்டி வந்த வேனையும் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகளான வேலூர் சைதாப்பேட்டை பிடிசி ரோடு பகுதியை சேர்ந்த காதர் என்கிற அப்துல் காதர் (32), தங்கராஜ், குட்ட சுரேஷ் (39) ஆகியோரை கைது செய்தனர். இதில் தங்கராஜ் இறந்துவிட்டார்.

    இந்த வழக்கு வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு வக்கீல் பார்த்திபன் வாதாடினார்.

    இந்த வழக்கில் மாவட்ட அமர்வு நீதிபதி வசந்த லீலா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் வேன் டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த காதர் என்கிற அப்துல் காதர் மற்றும் குட்ட சுரேஷ் ஆகியோருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

    • விவசாயிகள் முன்பதிவு செய்து பங்கேற்கலாம்
    • 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    ஈஷா யோகா மையம் காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன் இன்று வேலூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக இந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்கேற்ப மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஈஷா நர்சரிகளில் தேக்கு செம்மரம் சந்தனம் வேங்கை மலைவேம்பு மஞ்சள் கடம்பு போன்ற டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் ஏற்கனவே 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 274 விவசாயிகளுக்கு 5 லட்சம் மரக்கன்றுகள் வரை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் விவசாயிகளுக்கு வருகிற 24-ந் தேதி கள பயிற்சி நடக்கிறது. இதில் மரங்கள் வளர்ப்பு பராமரிப்பு குறித்து விவசாயிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    மண் வளம் அதிகரிப்பதிலும் குறைந்த நீரில் அதிக வளர்ச்சி எடுப்பதற்கு மரங்கள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.

    விவசாயிகள் இந்த பயிற்சியின் மூலம் பயன்பெற முடியும் இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 94 42 590079, 94 42 590081 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார் பேட்டி யின்போது விவசாயிகள் சுஜாதா, கோவிந்தன் மற்றும் ஈஷா யோகா மைய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களும் ஒட்ட கூடாது
    • டி.ஜி.பி. உத்தரவு

    வேலூர்:

    போலீஸ் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

    அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள போலீசார் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் போலீசார் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.

    மேலும் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் உடனடியாக அகற்ற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் போலீஸ் அலுவலகங்களில் பணியாற்றும் பணியா ளர்களும் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் தங்களது சொந்த வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்றி வருகின்றனர்.

    • அதிகாரிகள் ஆய்வு
    • வேலூரில் மழை வெள்ளத்தால் பாதிப்பு

    வேலூர்:

    வேலூர் கோட்டை பின்புறம் உள்ள கன்சால்பேட்டை இந்திரா நகர் பகுதிகளில் கால்வாய் சாலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் நிக்கல்சன் கால்வாயில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் ஆண்டுதோறும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    கன்சால் பேட்டையில் 46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கன்சால்ப்பேட்டை பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோர் கன்சால் பேட்டையில் வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்குள்ள 46 குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். அவர்களுக்கு அப்துல்லாபுரம் பகுதியில் வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.அங்கே சென்றால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும்.

    கன்சால் பேட்டையில் தொடர்ந்து குடியேற முடியாது.இங்கே இருந்தால் சாக்கடை மற்றும் மழை வெள்ளத்தால் உங்களது சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே எதிர்கால நலன் கருதி அந்த இடத்தை காலி செய்து விட்டு அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு குடியேற வேண்டுமென கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

    • அதிகபட்சமாக 58.2 மில்லி மீட்டர் மழை பதிவானது
    • வேலூரில் தெருக்களில் திடீர் பள்ளங்களால் அவதி

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் கூடுதலாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.

    வேலூர், சத்துவாச்சாரி, வேளாளர் தெருவில் உள்ள விநாயகர் கோவில் அருகே தெருவில் நீளமாக பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மழைநீர் தேங்கியது. அந்த வழியாக குறிஞ்சி நகர் முல்லை நகர் பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் கூட பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, காவேரிபாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது.ஆற்காட்டில் அதிகபட்சமாக 58.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.திருப்பத்தூர் நகர பகுதியில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக மாவட்டத்தில் ஜோலார்பேட்டையில் 57 மில்லி மீட்டர் மழை பதிவானது. பலத்த மழை காரணமாக கானறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர் 7.4 காட்பாடி 7, மேல் ஆலத்தூர் 14.8, திருவலம் 7.4,குடியாத்தம் 2, திருப்பத்தூர் 12, ஜோலார்பேட்டை 57, நாட்டறம்பள்ளி 28,ஆம்பூர் 43, வாணியம்பாடி 26,ஆலங்காயம் 32, வாலாஜா 13.5, அரக்கோணம் 9.2, ஆற்காடு 58.2, காவேரிப்பாக்கம் 31, அம்மூர் 4, சோளிங்கர் பகுதியில் மழை இல்லை.

    • குண்டர் சட்டம் பாய்ந்தது
    • வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்

    வேலூர்:

    ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. அதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக மதுரைதேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29) இவர் குடியாத்தம் வழியாக போதை பொருள் கடத்தி வந்ததாக குடியாத்தம் டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதால் ராமகிருஷ்ணன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ராமகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (39) இவர் தொடர்ந்து குற்றசெயலில் ஈடுபட்டதால் குடியாத்தம் டவுன் போலீசார் குண்டர் சட்டத்தில் கோவிந்தராஜை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
    • விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதியது.

    அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் விபத்தில் சிக்கியிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உடையந்த அள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (வயது 53). மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த பயணிகள் 9 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் 8 பேர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது. விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர் :

    வேலூர் மாவட்டத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்று போக்கால் பாதிக்காமல் இருக்கவும், இறப்பை தடுக்கவும், ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் இன்று தொடங்கியது.

    காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தில் முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத் துணை இயக்குனர் பானுமதி, தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். 30.07.2022 வரை இந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்துவதற்காகவும் அதனால் ஏற்படும் நீரிழப்பு நிலையினை தடுப்பதற்காகவும் ஓ.ஆர்.எஸ். உயிர்காக்கும் அமுதம் மற்றும் துத்தநாக  மாத்திரை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 1,23,523 உள்ளனர். கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள் மூலமாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு குழந்தைக்கு ஒரு ஓ.ஆர்.எஸ். உயிர்காக்கும் அமுதம் பொட்டலம் வழங்கப்படும். மேலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஓ.ஆர்.எஸ் உயிர்காக்கும் திரவம் தயாரிக்கும் விதம், கைகழுவும்முறை குறித்து சுகாதார கல்வி அளிக்கப்படும். இந்த முகாமில் 1075 அங்கன்வாடி பணியாளர்கள். 221 கிராம, நகர்புற சுகாதார செவிலியர்கள் 60 ஆஷா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அனைத்து அரசு ஆரம் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காட்சி பகுதி ஏற்படுத்தப்படும். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஓ. ஆர். எஸ். மற்றும்  முகப்புக் இந்த பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மற்றும் விழிப்புணர்வு பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்த முகாமிற்கு தேவையான ஓ. ஆர். எஸ். பொட்டலம், துத்தநாக மாத்திரை பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பங்குபெற்று குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் நீரிழப்பு நிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களது வயதுக்கேற்ப இந்தக் கரைசலைக் குடிக்க வேண்டும். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 50-100 மில்லி (¼ டம்ளர்) வரை வழங்கலாம். 2 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 100-200 மில்லி (½ டம்ளர்) வரை கொடுக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அவர்களால் குடிக்க முடிந்த அளவு குடிப்பது நல்லது; அதிகபட்சமாக 2 லிட்டர் ( ½ டம்ளர்) வரை வழங்கலாம். மேற்கூறிய அளவுகளில் ஒவ்வொருமுறை வயிற்றுப்போக்கை அடுத்தும் ஓ.ஆர்.எஸ். கரைசலைப் புகட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

    • வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது
    • விரைவில் விநியோகிக்க ஏற்பாடு

    வேலூர்:

    தமிழகத்தில் அரசு பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி, மற்றும் அரசு நிதி உதவிபள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 11-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது இந்த மாணவ மாணவிகள் பிளஸ் 2 படித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6,348 மாணவர்கள், 7147 மாணவிகள் என மொத்தம் 13,495 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

    இந்த சைக்கிள்கள் வேலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளன.அவற்றை பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

    விரைவில் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    குடியாத்தம்:

    சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நகராட்சிகளின் வேலூர் மண்டல நிர்வாக இயக்குனர் பி.குபேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த செஸ் போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். குடியாத்தம் தாசில்தார் எஸ்.லலிதா, நகர்மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் 

    • குடியாத்தம் பகுதியில் ரூ.18 லட்சத்தில் வைக்கப்பட்டிருந்தது
    • தொடர் பைக் திருட்டை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

    குடியாத்தம்:

    சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியை குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம் கண்காணித்து வருகிறது.

    குடியாத்தம் நகராட்சி மற்றும் ஏராளமான கிராமங்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ளது.

    அதன் கட்டுப்பாட்டுக்குள் ஏராளமான தீப்பெட்டி, பீடி தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு கூடங்கள், காலனி, தோல் தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது.

    மேலும் குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் மிகப்பெரிய தினசரி மார்க்கெட் உள்ளது. உழவர் சந்தையும் உள்ளது. வேலூர் மாவட்டத்திலேயே அதிக அளவு நகை கடைகளையும் குடியாத்தம் நகரில் உள்ளடக்கியுள்ளது.

    குடியாத்தம் நகரத்தைதாண்டி தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு வியாபாரத் தலமாகவும் குடியாத்தம் நகரம் அமைந்துள்ளது.

    இங்கு அடிக்கடி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் புகார் மீது உடனடி நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் உள்ளது.

    அதேபோல் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படாத நாளே இல்லை எனக் கூறும் அளவிற்கு தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    குறிப்பாக அரசு மருத்துவமனை சாலையில் மருத்துவ மனைக்கு நோயாளி களுடன் வரும் அவரது உறவினர்கள் நோயாளிகள் உடைய மோட்டார் சைக்கிள் திருடு போகிறது.

    அதேபோல் பஸ் நிலையம், உழவர் சந்தை பஜார், சந்தப்பேட்டை, நேதாஜிசவுக் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருடுபோன வண்ணம் உள்ளது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தும் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. பெரும்பாலான வாகனங்கள் இன்சூரன்ஸ் காலாவதியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சிக்கலாக உள்ளது. இருப்பினும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக குடியாத்தம் நகர பகுதியில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் குடியாத்தம் கிராமிய பகுதிகள் மற்றும் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு குடியாத்தம் செதுக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து ஆடுகளை திருடி சென்றனர். அதன் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அளித்தும் நடவடிக்கை இல்லை, தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே பகுதியில் ஆடு திருட்டு நடைபெற்றது.

    அதேபோல் குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே 2 திருட்டுகளும், நத்தம் கிராமம், சேம்பள்ளி, குடியாத்தம் டவுனில் பல இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. இதுவரை குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்க வில்லை.

    பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 18 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை.

    குடியாத்தம் நகரில் உள்ள நகைக்கடை வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் வணிகர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், நிதி நிறுவனத்தினர், கல்வி நிலையங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு ரூபாய் சுமார் 18 லட்சம் வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க கொடுத்தனர். அதன் பேரில் 98 அதிநவீன கேமராக்கள் நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது 75 கேமராக்கள் வரை வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மணல் திருடர்களுக்கு இது வசதியாக போய்விட்டது அதேபோல் மோட்டார் சைக்கிள் திருடுபவர்களும், வீடு புகுந்து திருடுபவர்களும் அச்சமின்றி திருடுகிறார்கள். காலை நேரங்களிலே மணல் லாரிகள் சர்வ சாதாரணமாக செல்கிறது ஏனென்றால் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் கண்காணிப்பு இல்லாமல் பிடிப்படாமல் இருக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள் திருட்டையும், சமூக விரோத செயல்களையும் தடுக்க உதவியாக இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் சரி செய்ய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குடியாத்தம் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.

    திருட்டு சம்பவங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் குடியாத்தம் பகுதிக்கு தனி கவனம் செலுத்தி வேலூரில் உள்ளதுபோல் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தனியாக குற்றப்பிரிவு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×