என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் வளர்ப்பு பயிற்சி
- விவசாயிகள் முன்பதிவு செய்து பங்கேற்கலாம்
- 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
வேலூர்:
ஈஷா யோகா மையம் காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன் இன்று வேலூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக இந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஈஷா நர்சரிகளில் தேக்கு செம்மரம் சந்தனம் வேங்கை மலைவேம்பு மஞ்சள் கடம்பு போன்ற டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் ஏற்கனவே 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 274 விவசாயிகளுக்கு 5 லட்சம் மரக்கன்றுகள் வரை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் விவசாயிகளுக்கு வருகிற 24-ந் தேதி கள பயிற்சி நடக்கிறது. இதில் மரங்கள் வளர்ப்பு பராமரிப்பு குறித்து விவசாயிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்கப்படுகிறது.
மண் வளம் அதிகரிப்பதிலும் குறைந்த நீரில் அதிக வளர்ச்சி எடுப்பதற்கு மரங்கள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.
விவசாயிகள் இந்த பயிற்சியின் மூலம் பயன்பெற முடியும் இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 94 42 590079, 94 42 590081 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார் பேட்டி யின்போது விவசாயிகள் சுஜாதா, கோவிந்தன் மற்றும் ஈஷா யோகா மைய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






