என் மலர்
நீங்கள் தேடியது "One ORS per child. Potion of Life-Saving Elixir"
- விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர் :
வேலூர் மாவட்டத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்று போக்கால் பாதிக்காமல் இருக்கவும், இறப்பை தடுக்கவும், ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் இன்று தொடங்கியது.
காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தில் முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத் துணை இயக்குனர் பானுமதி, தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். 30.07.2022 வரை இந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்துவதற்காகவும் அதனால் ஏற்படும் நீரிழப்பு நிலையினை தடுப்பதற்காகவும் ஓ.ஆர்.எஸ். உயிர்காக்கும் அமுதம் மற்றும் துத்தநாக மாத்திரை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 1,23,523 உள்ளனர். கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள் மூலமாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு குழந்தைக்கு ஒரு ஓ.ஆர்.எஸ். உயிர்காக்கும் அமுதம் பொட்டலம் வழங்கப்படும். மேலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஓ.ஆர்.எஸ் உயிர்காக்கும் திரவம் தயாரிக்கும் விதம், கைகழுவும்முறை குறித்து சுகாதார கல்வி அளிக்கப்படும். இந்த முகாமில் 1075 அங்கன்வாடி பணியாளர்கள். 221 கிராம, நகர்புற சுகாதார செவிலியர்கள் 60 ஆஷா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து அரசு ஆரம் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காட்சி பகுதி ஏற்படுத்தப்படும். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஓ. ஆர். எஸ். மற்றும் முகப்புக் இந்த பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மற்றும் விழிப்புணர்வு பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்த முகாமிற்கு தேவையான ஓ. ஆர். எஸ். பொட்டலம், துத்தநாக மாத்திரை பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பங்குபெற்று குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் நீரிழப்பு நிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களது வயதுக்கேற்ப இந்தக் கரைசலைக் குடிக்க வேண்டும். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 50-100 மில்லி (¼ டம்ளர்) வரை வழங்கலாம். 2 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 100-200 மில்லி (½ டம்ளர்) வரை கொடுக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அவர்களால் குடிக்க முடிந்த அளவு குடிப்பது நல்லது; அதிகபட்சமாக 2 லிட்டர் ( ½ டம்ளர்) வரை வழங்கலாம். மேற்கூறிய அளவுகளில் ஒவ்வொருமுறை வயிற்றுப்போக்கை அடுத்தும் ஓ.ஆர்.எஸ். கரைசலைப் புகட்ட வேண்டும் என தெரிவித்தனர்.






