என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதைபொருள் கடத்திய 2 பேர் கைது
- குண்டர் சட்டம் பாய்ந்தது
- வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
வேலூர்:
ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. அதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக மதுரைதேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29) இவர் குடியாத்தம் வழியாக போதை பொருள் கடத்தி வந்ததாக குடியாத்தம் டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதால் ராமகிருஷ்ணன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ராமகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (39) இவர் தொடர்ந்து குற்றசெயலில் ஈடுபட்டதால் குடியாத்தம் டவுன் போலீசார் குண்டர் சட்டத்தில் கோவிந்தராஜை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.






