என் மலர்
நீங்கள் தேடியது "It rained heavily during the night"
- வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் கூடுதலாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை காவேரிப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்த கூடியது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆலங்காயம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.திருப்பத்தூர் நகர பகுதியில் லேசான மழை பெய்தது. பலத்த மழை காரணமாக கானறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர் 13.5,காட்பாடி 30.1, மேல் ஆலத்தூர் 3.8, திருவலம் 2 ,குடியாத்தம்4. 2, திருப்பத்தூர் 34, ஜோலார்பேட்டை 39, நாட்டறம்பள்ளி 29 ,ஆம்பூர் 3.2, வாணியம்பாடி 37 ,ஆலங்காயம் 53.8, வாலாஜா 6.4, அரக்கோணம் 1.2, காவேரிப்பாக்கம் 25, கலவை 45.8 சோளிங்கர் 39.






