என் மலர்
வேலூர்
- மத்திய மந்திரி பதில்
- கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி
வேலூர்:
பாராளுமன்றத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பேசியதாவது:-
கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி
பல்வேறு வகையான புற்றுநோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை மற்றும் சிகிச்சைக்காக ஆயுஷ் நாட்டு மருந்துகளை மத்திய அரசு அங்கீகரித்திருக்கிறதா? அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் மருந்துகளின் தற்போதைய பட்டியல்.
உயிர் காக்கும் மருந்துகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறதா ?
கடந்த ஐந்தாண்டுகளில் ஒப்புதலுக்காகப் பதிவுசெய்யப்பட்ட ஆயுஷ் மருந்துகளின் விரிவான பட்டியல். ஒப்புதல் பெறப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மற்றும் அனுமதி நிலுவையில் உள்ளவை என தனித்தனியாக விவரம் ? வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், புற்றுநோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கான சிகிச்சைக்காக ஆயுஷ் நாட்டு மருந்துகளை அங்கீகரித்துள்ளது. ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் மேற்கொண்டுள்ளது.
புற்றுநோய் நோயாளிகள் மற்றும் சீரியஸ் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மருத்துவ ஆய்வுகள். புற்றுநோய் சிகிச்சை நடைமுறைகளின் ஆவணங்களைத் தவிர முதல் செரோலாஜிக்கல் எபிடெலியல் கருப்பை புற்றுநோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் தொடர்பான பல்வேறு மருத்துவ ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் சிறுநீரகவியல், ஒருங்கிணைந்த புற்றுநோய் பராமரிப்பு மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் ஆகியவற்றில் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வருகிறது.
ஆயுஷ் அமைச்சகம் ஜனவரி, 2022-ல் அத்தியாவசிய ஆயுஷ் மருந்துகளின் தேசியப் பட்டியலை வெளியிட்டது. இது அத்தியாவசிய ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளுடன் அவற்றின் குறிப்பு உரை, முக்கிய நோய் அறிகுறிகள், டோஸ், முன்னெச்சரிக்கை முரண்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும், ஆயுஷ் மருத்துவ முறைக்கு ' உயிர் காக்கும் மருந்துகள் ' என்ற தனி வகை இல்லை என்று பதில் அளித்தார்.
- காட்பாடி அரசு பள்ளியில்
- வீடுகளில் ஏற்றப்படுகிறது
வேலூர்:
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 13-ம் தேதி முதல் 15 -ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்காக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது காட்பாடி தபால் நிலையத்தில் இன்று முதல் தேசிய கொடி விற்பனைக்கு வந்தது.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் செயலாளர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் தேசியக்கொடி வழங்கினார்.
தலைமை ஆசிரியர் சரளா, ஆசிரியர் திருமொழி ஆய்வக உதவியாளர் மணி, சவுமியா ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- வருகிற 8-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது
- சரியான நேரத்திற்குள் வரவேண்டும்
வேலூர்:
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரியில் வரும் 8-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை இளநிலை பட்டப்படிப்புக ளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில், மதிப் பெண் தரவரிசை பட்டி யல் அடிப்படையில், வரும் 8 ம் தேதி காலை 9.30 மணி யளவில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் என்சிசி, ஸ்போர்ட்ஸ், முன்னாள் படைவீரர், மாற்றுத்திற னாளிகள், இளம் விதவைகள், அந்தமான் , நிகோ பார் தீவுகளை சேர்ந்த தமிழர்கள் ஆகியோரை சார்ந்தவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நடக் கிறது.
மறுநாள் 10-ந் தேதி கலைப்பாடப்பிரவுகளான வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை பாடப்பிரிவுகளில் பகுதி -1 தமிழ், பகுதி -2 ஆங்கிலம் தவிர்த்து, பகுதி - 3, 400.
முதல் 320 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக் கிறது.
11-ந் தேதி தமிழ், ஆங்கில மொழிப்பாடப் பிரிவுகளில் தமிழில் 100 முதல் 90 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர் களுக்கும், ஆங்கிலத்தில் 100 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
13-ந் தேதி அறிவியல் பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட் டச்சத்து பாடப்பிரிவுகளில் பகுதி -1 தமிழ், பகுதி -2 ஆங்கிலம் தவிர்த்து, பகுதி 3-ல், 400 முதல் 320 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற வர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வு நடைபெறும் போது, மாணவர்கள் தங்களின் உண்மை சான்றிதழ்களான 10 ம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ்.
11-ம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ். 12 ம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றி தழ், ஆதார் அடையாள அட்டை, வருவாய் சான் றிதழ், வங்கி கணக்கு புத்த கம் முதல் பக்கம் மற்றும் மேற்கண்ட சான்றிதழ்க க ளின் தலா 2 நகல்கள் கொண்டு வர வேண்டும்.
மாணவர் சேர்க்கை கட்டணம், கலை மற்றும் வணிக பாடப்பிரிவுக்கு 72,306, அறிவியல் பாடப் பிரிவுக்கு 72,336, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு 71,736 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன், உரிய கட்டணம் மற்றும் கொரோனா தடுப்பு கவசங்களுடன் வர வேண்டும். காலதாமதமாக வருபவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிமை கோர முடியாது.
இத்தகவலை கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.
- ஏறி குதிக்க முடியாது
- சமூக விரோத செயல் தடுக்க நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மக்கள் மற்றும் வெளி யூர்களில் இருந்து வரும் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக கோட்டை அமைந்துள்ளது.
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள் அங்குள்ள அருங்காட்சியம், கோட்டை மதில் சுவர்களை சுற்றி பார்வையிடுகின்றனர். மாலை நேரங்களில் கோட்டைக்கு வருபவர்களில் பெரும்பாலும் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள பூங்காவுக்கு குடும்பத்துடன் வருவதையே விரும்புகின்றனர்.
கோட்டை நுழைவு வாயிலுக்கு இருபுறமும் 2 பூங்காக்கள் உள்ளன. இதில் சாரதிமாளி கைக்கு எதிரில் உள்ள ஒரு பூங்காவை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பூங்கா இரவு 8 மணி வரை திறந்திருக்கிறது. இரவு நேரங்களில் பூங்கா இரும்பு வேலியில் ஏறி உள்ளே குதித்து சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர பகல் நேரங்களிலும் பொதுமக்கள் முறையான வழியில் செல்லாமல் பூங்காவில் உள்ள இரும்பு வேலி தாண்டி உள்ளே செல்கின்றனர். இதனை தடுக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது கோட்டை முன்பு உள்ள கம்பி வேலியை மேலும் 2 ½ அடி உயரம் அதிகரித்து வருகின்றனர்.
இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. கோட்டை முன்பு தற்போது கம்பி வேலிகள் உயரம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் முதற்கட்டமாக கோட்டை முன்பு உள்ள கம்பி வேலிகள் 2 ½ அடி உயரம் அதிகரிக்கப்படுகிறது. படிப்படியாக கோட்டை சுற்றிலும் கம்பிவேலி உயரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கோட்டை பூங்காவில் உட்காரும் நாற்காலி, சிறந்த நடைபாதை அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
அதேநேரம், கோட்டை அகழி படகு போக்குவரத்து பகுதியில் உள்ள பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இங்குள்ள அழகிய சிற்பங்கள் பல பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துவருகிறது.
முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் செடிகள், புற்கள் வளர்ந்துள்ளது. மரங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்? என்றும் தெரிவதில்லை.
புதர்களால் மண்டியிருக்கும் பூங்காவில் பகல் நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே, இந்த பூங்காவை தொல்லியல் துறையினர் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்றிக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
- போக்குவரத்து மாற்றம் இன்று முதல் நடைமுறை
- விபத்து தடுக்க நடவடிக்கை
வேலூர்:
குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா இடையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் போன்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வழிதடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து சயனகுண்டா, பரதராமி வழியாக திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மார்கமாக இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் பரதராமியிலிருந்து உமராபாத் - ஆம்பூர் வழியாக செல்ல வேண்டும். கிருஷ்ணகிரியில் இருந்து வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் உமராபாத் - ஆம்பூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும்.
திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு
- போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் வயது 17, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இந்நிலையில் கூலித் தொழிலாளியின் மகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடிய அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் மகன் பரசுராமன் (வயது 18)என்பவர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபர் பரசுராமனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ய உதவியதாக சிலர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
நேற்று தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையி லான போலீசார் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அபிநாத் (18), பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் வயது (20), சின்ன ராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (20), ஜிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஜய் (21) ஆகிய 4 பேரை 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- 3 நாட்கள் வரை இருக்கும்
- பெற்றோர்களுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள தட்ப வெப்பநிலை காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உடல் வலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குழந்தைகள் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். இதனால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்:-
வேலூர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக சளி காய்ச்சல் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான்.இநத காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை வருடம் தோறும் இது போன்ற காய்ச் சல்கள் வருவது வழக்கம்.
இந்த காய்ச்சல் வந் தால் குறைந்தது 3 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் வந்த குழந்தைகள் மூலம் மற்ற குழந்தைகளுக்கும் பரவும். சில குழந்தைளுக்கு டயோரியா பாதிப்பு ஏற்படுகிறது.
அவர்களுக்கு வழக்கமான சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும். சில குழந்தைகளுக்கு வாந்தி இருக்கும் அப்படி இருந்தாலும் அவர்களுக்கு வழக்கம் போல உணவு தண்ணீர் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும். சளி காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
முடிந்த வரை குழந்தைகளை வெளியில் விடாமல் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.
தொண்டையில் வாய்ப்புண் ஏற்படுவதால் குழந்தைகளால் சாப்பிட இயலாது அவர்களுக்கு நீர் ஆகா ரங்களை மட்டும் கொடுக்கவும். குழந்தைகளுக்கு கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆயில் மூலம் கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ள வேண்டும்.
வீட்டின் அருகில் பழைய பிளாஸ்டிக் டயர் தேங்காய் ஆகியவற்றில் தேங்கும் மழை நீரில் டெங்கு கொசு பரவ வாய்ப்புள்ளது. அவ்வாறு மழைநீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழையில் நனையாமல் பெற்றோர்கள் குழந்தை களை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சுதந்திர தின அமிர்த பெருவிழா
- 15 -ந்தேதி வரை மிளிரும் என அதிகாரிகள் தகவல்
வேலூர்:
நாடு முழுவதும் நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை அமிர்தபெருவிழாவாக, பல வகைகளில் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வருகிறது.
விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து சிப்பாய் புரட்சி நடந்த வேலுார் கோட்டை வர லாற்று சிறப்புமிக்கது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நி லையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகழியின் எதிரே உள்ள மதிற்சுவரில், மூவர்ணக்கொடியின் வண் ணத்தை போல் மின்விளக் குகள் அலங்கரிக்கப்பட் டுள்ளது.
இரவு நேரங்களில் கோட்டையில் ஒளிரும் தேசியக்கொடியின் வண் ணம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது. வரும் 15 -ந்தேதி வரை இந்த மின்விளக்கு மூவர் ணக்கொடியின் வண்ணத் தில் கோட்டை மிளிரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- வேலூர் தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசியக்கொடி விற்பனை
- இன்று 500-க்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் விற்பனையானது
வேலூர்:
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சுதந்திர தினவிழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.
இதில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட காட்டன், பாலிஸ்டர், கம்பளி மற்றும் பட்டு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட இருப்பதால், அதற்கு தேவையான கொடிகள் அனைத்து மாநிலங்களிலும் துரிதகதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் எளிதாக தேசியக்கொடி கிடைக்க செய்வதற்காக நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களிலும் கொடியை விற்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று விற்பனை தொடங்கியது
வேலூர் தலைமை தபால் அலுவலகம் உட்பட வேலூர் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை இன்று தொடங்கப்பட்டது. வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் சூப்பிரண்டு ராஜகோபால் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 10,500 தேசியக் கொடிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளான இன்று 500-க்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் விற்பனையானது.
- 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க திட்டம்
- கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்
வேலூர்:
மத்திய அரசின் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க வேலூரில் உள்ள கடைகளில் 26 கிலோ அரிசி மூட்டை கள் விற்பனைக்கு வந்துள்ளன.
மத்திய அரசு அத்தியாவசிய உணவுப்பொருட்களுக் கான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்தது. இதனை கண்டித்தும், வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 16-ந் தேதி மொத்த அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி விற்பனை கடை வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மத்திய அரசு 25 கிலோவிற்கு மேல் பண்டல்கள் (பேக்கிங்) செய்யப்பட்ட உணவுப்பொருட்க ளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி கிடையாது. 25 கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையில் பண்டல்கள் செய்யப்பட்ட அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரிசெலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது. இந்த நடைமுறை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் நகரில் உள்ள அரிசி கடைகளில் 26 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 5 சதவீத - ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க 26 கிலோ அரிசி மூட்டையை அரிசி ஆலைகள் தயார் செய்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளன. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது. எனவே பொதுமக்களின் நலன் கருதி 25 கிலோ மூட்டைக்கு பதி லாக 26 கிலோ மூட்டைக ளாக அரிசி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி கடைகளுக்கு ஆரணி, பெங்களூரு உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து தற்போது வரும் அரிசி மூட்டைகள் 26 கிலோவாகவே வருகிறது.
இதனால் பொதுமக்க ளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதே சமயம் 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ மூட்டைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது.
- சுதந்திர தினத்தையொட்டி கலெக்டர் அறவிப்பு
- 6, 7-ந் தேதிகளில் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு
வேலூர்:
இந்திய நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை அமுதப்பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றுவது மற்றும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசுகையில்:-
"சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்ற அறி வுறுத்தப்பட்டுள்ளது. ஒவ் வொருதுறை அதிகாரிகளும் தங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்க. ளிடமும் விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்காக இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது.
தேசிய கொடி ஏற்றியவர்கள் அதுகுறித்து அதில் பதிவு செய்யலாம். அனைவரும் தேசியகொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி வரும் வருகிற 6, 7-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இதில் டென்னிஸ், கிரிக்கெட், கேரம் போர்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான விவரங்களை அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
- 5 சட்டமன்ற தொகுதிகளில் 1301 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளரால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் நேற்று முதல் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது . வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாக்கா ளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1301 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியம னம் செய்யப்பட்டு அவர்கள் வீடு , வீடாக சென்று ஆதார் எண் விபரங்களை படிவம் 6 பில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின்அ டிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை . அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6 பி மூலம் தெரிவித் துக்கொள்ளலாம். மேலும், வாக்காளர், சேவை மையங்கள் , இ - சேவை மையங்கள் மூலமாகவும் சமர்ப்பித்து கொள்ளலாம். மேலும் , வாக்காளர்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம் -6 பியை Elector Face Portal / Apps Like NVSP , VHA ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் .
ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்க ளிடமிருந்து படிவம் 6 பியில் குறிப்பிடப்பட் டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும். இப்பணியானது வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், வாக்கா ளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர் காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது.
எனவே , மேற்படி பணி யினை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






