என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது
- 5 சட்டமன்ற தொகுதிகளில் 1301 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளரால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் நேற்று முதல் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது . வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாக்கா ளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1301 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியம னம் செய்யப்பட்டு அவர்கள் வீடு , வீடாக சென்று ஆதார் எண் விபரங்களை படிவம் 6 பில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின்அ டிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை . அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6 பி மூலம் தெரிவித் துக்கொள்ளலாம். மேலும், வாக்காளர், சேவை மையங்கள் , இ - சேவை மையங்கள் மூலமாகவும் சமர்ப்பித்து கொள்ளலாம். மேலும் , வாக்காளர்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம் -6 பியை Elector Face Portal / Apps Like NVSP , VHA ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் .
ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்க ளிடமிருந்து படிவம் 6 பியில் குறிப்பிடப்பட் டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும். இப்பணியானது வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், வாக்கா ளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர் காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது.
எனவே , மேற்படி பணி யினை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






