என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள், சிறுவர்களுக்கு காய்ச்சல் பரவுகிறது
    X

    குழந்தைகள், சிறுவர்களுக்கு காய்ச்சல் பரவுகிறது

    • 3 நாட்கள் வரை இருக்கும்
    • பெற்றோர்களுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள தட்ப வெப்பநிலை காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உடல் வலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குழந்தைகள் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். இதனால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்:-

    வேலூர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக சளி காய்ச்சல் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான்.இநத காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை வருடம் தோறும் இது போன்ற காய்ச் சல்கள் வருவது வழக்கம்.

    இந்த காய்ச்சல் வந் தால் குறைந்தது 3 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் வந்த குழந்தைகள் மூலம் மற்ற குழந்தைகளுக்கும் பரவும். சில குழந்தைளுக்கு டயோரியா பாதிப்பு ஏற்படுகிறது.

    அவர்களுக்கு வழக்கமான சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும். சில குழந்தைகளுக்கு வாந்தி இருக்கும் அப்படி இருந்தாலும் அவர்களுக்கு வழக்கம் போல உணவு தண்ணீர் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும். சளி காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    முடிந்த வரை குழந்தைகளை வெளியில் விடாமல் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

    தொண்டையில் வாய்ப்புண் ஏற்படுவதால் குழந்தைகளால் சாப்பிட இயலாது அவர்களுக்கு நீர் ஆகா ரங்களை மட்டும் கொடுக்கவும். குழந்தைகளுக்கு கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆயில் மூலம் கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ள வேண்டும்.

    வீட்டின் அருகில் பழைய பிளாஸ்டிக் டயர் தேங்காய் ஆகியவற்றில் தேங்கும் மழை நீரில் டெங்கு கொசு பரவ வாய்ப்புள்ளது. அவ்வாறு மழைநீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மழையில் நனையாமல் பெற்றோர்கள் குழந்தை களை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×