என் மலர்
நீங்கள் தேடியது "Wire fences are growing 2 ½ feet high"
- ஏறி குதிக்க முடியாது
- சமூக விரோத செயல் தடுக்க நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மக்கள் மற்றும் வெளி யூர்களில் இருந்து வரும் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக கோட்டை அமைந்துள்ளது.
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள் அங்குள்ள அருங்காட்சியம், கோட்டை மதில் சுவர்களை சுற்றி பார்வையிடுகின்றனர். மாலை நேரங்களில் கோட்டைக்கு வருபவர்களில் பெரும்பாலும் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள பூங்காவுக்கு குடும்பத்துடன் வருவதையே விரும்புகின்றனர்.
கோட்டை நுழைவு வாயிலுக்கு இருபுறமும் 2 பூங்காக்கள் உள்ளன. இதில் சாரதிமாளி கைக்கு எதிரில் உள்ள ஒரு பூங்காவை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பூங்கா இரவு 8 மணி வரை திறந்திருக்கிறது. இரவு நேரங்களில் பூங்கா இரும்பு வேலியில் ஏறி உள்ளே குதித்து சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர பகல் நேரங்களிலும் பொதுமக்கள் முறையான வழியில் செல்லாமல் பூங்காவில் உள்ள இரும்பு வேலி தாண்டி உள்ளே செல்கின்றனர். இதனை தடுக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது கோட்டை முன்பு உள்ள கம்பி வேலியை மேலும் 2 ½ அடி உயரம் அதிகரித்து வருகின்றனர்.
இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. கோட்டை முன்பு தற்போது கம்பி வேலிகள் உயரம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் முதற்கட்டமாக கோட்டை முன்பு உள்ள கம்பி வேலிகள் 2 ½ அடி உயரம் அதிகரிக்கப்படுகிறது. படிப்படியாக கோட்டை சுற்றிலும் கம்பிவேலி உயரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கோட்டை பூங்காவில் உட்காரும் நாற்காலி, சிறந்த நடைபாதை அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
அதேநேரம், கோட்டை அகழி படகு போக்குவரத்து பகுதியில் உள்ள பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இங்குள்ள அழகிய சிற்பங்கள் பல பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துவருகிறது.
முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் செடிகள், புற்கள் வளர்ந்துள்ளது. மரங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்? என்றும் தெரிவதில்லை.
புதர்களால் மண்டியிருக்கும் பூங்காவில் பகல் நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே, இந்த பூங்காவை தொல்லியல் துறையினர் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்றிக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.






