என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி இணையதளத்தில் பதிவு செய்யலாம்
- சுதந்திர தினத்தையொட்டி கலெக்டர் அறவிப்பு
- 6, 7-ந் தேதிகளில் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு
வேலூர்:
இந்திய நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை அமுதப்பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றுவது மற்றும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசுகையில்:-
"சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்ற அறி வுறுத்தப்பட்டுள்ளது. ஒவ் வொருதுறை அதிகாரிகளும் தங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்க. ளிடமும் விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்காக இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது.
தேசிய கொடி ஏற்றியவர்கள் அதுகுறித்து அதில் பதிவு செய்யலாம். அனைவரும் தேசியகொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி வரும் வருகிற 6, 7-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இதில் டென்னிஸ், கிரிக்கெட், கேரம் போர்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான விவரங்களை அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.