என் மலர்
நீங்கள் தேடியது "Andhra Pradesh should go through Ambur"
- போக்குவரத்து மாற்றம் இன்று முதல் நடைமுறை
- விபத்து தடுக்க நடவடிக்கை
வேலூர்:
குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா இடையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் போன்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வழிதடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து சயனகுண்டா, பரதராமி வழியாக திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மார்கமாக இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் பரதராமியிலிருந்து உமராபாத் - ஆம்பூர் வழியாக செல்ல வேண்டும். கிருஷ்ணகிரியில் இருந்து வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் உமராபாத் - ஆம்பூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும்.
திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.






