என் மலர்
நீங்கள் தேடியது "National flag on houses"
- வேலூர் தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசியக்கொடி விற்பனை
- இன்று 500-க்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் விற்பனையானது
வேலூர்:
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சுதந்திர தினவிழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.
இதில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட காட்டன், பாலிஸ்டர், கம்பளி மற்றும் பட்டு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட இருப்பதால், அதற்கு தேவையான கொடிகள் அனைத்து மாநிலங்களிலும் துரிதகதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் எளிதாக தேசியக்கொடி கிடைக்க செய்வதற்காக நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களிலும் கொடியை விற்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று விற்பனை தொடங்கியது
வேலூர் தலைமை தபால் அலுவலகம் உட்பட வேலூர் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை இன்று தொடங்கப்பட்டது. வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் சூப்பிரண்டு ராஜகோபால் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 10,500 தேசியக் கொடிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளான இன்று 500-க்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் விற்பனையானது.






