என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று முதல் தேசிய கொடி விற்பனைக்கு வந்தது"

    • காட்பாடி அரசு பள்ளியில்
    • வீடுகளில் ஏற்றப்படுகிறது

    வேலூர்:

    75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 13-ம் தேதி முதல் 15 -ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்காக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது காட்பாடி தபால் நிலையத்தில் இன்று முதல் தேசிய கொடி விற்பனைக்கு வந்தது.

    காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் செயலாளர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் தேசியக்கொடி வழங்கினார்.

    தலைமை ஆசிரியர் சரளா, ஆசிரியர் திருமொழி ஆய்வக உதவியாளர் மணி, சவுமியா ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×