என் மலர்
வேலூர்
- ரூ.55 லட்சம் ஒதுக்கீடு
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
குடியாத்தம்:
குடியாத்தம் நகரமன்றத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.
நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரப் பகுதியில் சபா கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமித்து, குழு செயலாளர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இந்த குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 144 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை இந்த மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் செம்மையாக நடைபெற நகர் பகுதிகளில் சபா கூட்டங்கள் நடைபெற உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கிராமங்களைப் போன்று நகர்களிலும் சபா கூட்டம் நடத்த உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நகர்மன்ற உறுப்பினர்கள் இந்த குழுக்களுடன் இணைந்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக நகர மன்ற தலைவர், அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்து அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த குடியாத்தம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சபை கூட்டங்கள் நடத்த வார்டுகளில் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாளமாக ஒரு உறுப்பினருக்கு நியமனச் சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆகியோர் வழங்கினர்.
- வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
- சி.சி.டி.வி. ேகமராவில் கொள்ளையர்களின் உருவம் சிக்கியது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த சராதிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(வயது65). குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது50). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவர்களின் ஒரே மகன் மோகன்ராஜ். மாற்று திறனாளியான இவர் கரடிகுடி பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
மனோகர் மற்றும் அவரது மனைவி மகன் என 3 பேரும் தினமும் காலை 7.30 மணிக்குள்ளாக பணிக்கு சென்று விட்டு, இரவு தான் வீடு திரும்புவார்களாம்.
ேநற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு மோகன்ராஜ் தனது கடையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டி இருந்த கேட் திறந்து உள்ளே போன மோகன்ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சிய டைந்துள்ளார்.
மேலும், உள்ளே சென்று அறையில் இருந்த 2 பீரோக்களில் பார்த்தபோது அதில் இருந்த துணிகள், பொருட்கள் எல்லாம் அறை முழுவதும் சிதறிக்கிடந்துள்ளது.
மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக மோகன்ராஜ தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். தொடர்ந்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, வீட்டின் வெளிப்புற பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் 2 பேர் வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. ஆனால் மறுபடியும் வெளியே வரும் காட்சிகள் பதிவாகவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- மழை நீர் தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் அடுத்த கீழ் வெங்கடாபுரம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமார வேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
கிராமங்கள் தோறும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் உயர் கல்வி படிக்க வைக்க வேண்டும்.
தற்போது கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால் தடுப்பூசி செலுத்த வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பேசினார்.
இது எடுத்து வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மழைக்காலங்களில் பாலாற்றில் வரும் வெள்ள நீர் கீழவெங்கடபுரம், சம்பங்கி நல்லூர் ஊருக்குள் புகுந்து விடுவதால் கரையோரங்களில் மழை நீர் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- கல்குவாரி மூட வலியுறுத்தல்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் அடுத்த பெருமுகை கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.இதனை அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர்.
இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டும் கூட்டம் நடந்த இடத்தில் இருந்தனர்.
கடந்த முறை கிராம சபை கூட்டம் நடந்தபோது பெருமுகை கல் குவாரியை மூட வேண்டும், மக்கள் வசிக்கும் பகுதியில் தொழிற்சாலை அமைத்து கனரக வாகனங்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றபட்டன.
ஆனால் இதுவரை கல்குவாரி மூடப்படவில்லை. வாகனங்கள் அந்த பகுதி வழியாக செல்வது நிறுத்தப்படவில்லை.
ஊராட்சியின் வரவு செலவு கணக்கை கேட்டதற்க்கு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை என்பதால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மழை காலத்தில் ஏற்படும் பாதிப்பு களை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக 23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அவர்களை தங்க வைக்க 26 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 24 பெண்கள் உட்பட மொத்தம் 239 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்த் துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பல்துறை அடங்கிய 6 குழுக்களும், உள்வட்ட அளவில் 20 குழுக்களும் அலுவலர்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த குழுக்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட 11 துறைகளின் அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை அவர்களது துறை தலைமைக்கு தெரியப்படுத்தி உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண். "1077" மற்றும் 0416-2258016 ஆகிய தொலைபேசி எண்களில் மழை வெள்ள பாதிப்புகளை தெரிவிக்கலாம்.
இந்த மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கவும், அவற்றின் நிலை குறித்து கண்காணிக்கவும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சார்புத் துறை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில்
கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.0416-2220519.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம்- 0416-2297647,
அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம்-9445461811. கே.வி.குப்பம் வட்டாட்சியர்
அலுவலகம்- 9629472352, குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் 04171-221177 மற்றும் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் 04171-292748 பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இந்த தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம்.
இவை அந்தந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நிலையில் கண்காணிக்கப்படும்.
மழை வெள்ளம் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், மழை காலங்களில் மின்சாதன பொருட்களை பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.
தேவையான அளவிற்கு மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குளம், குட்டை மற்றும் ஏரி ஆகிய நீர்தேங்கியுள்ள பகுதிகளில் விளையாடவோ, செல்பி புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்தது
- ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைந்த இந்தியாவின் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான ேநற்று தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி மற்றும் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், சாந்தி, கமலநாதன், ஜீவா உள்பட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
- நகராட்சிகளில் பகுதி சபா கூட்டம் முதன்முதலாக நடந்தது
- உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்தது
வேலூர்:
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இன்று நவம்பர் மாதம் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 247 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. வேலூர் அருகே உள்ள வெங்கடாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.
நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர் குப்பம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு ,ஆரணி ஆகிய நகராட்சிகளில் பகுதி சபா கூட்டங்கள் முதன் முதலாக இன்று நடந்தன.
திருவண்ணாமலை நகராட்சி 1-வது வார்டு பச்சையம்மன் கோவில் பகுதியில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு மனு வாங்கினார்.
இதேபோல வேலூர் மாநகராட்சி மற்றும் குடியாத்தம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நகராட்சிகளிலும் தற்போது பகுதி சபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இன்று முதன் முதலாக பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன.
- வருகிற 15-ந் தேதி முதல் நடக்கிறது
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிவீர் (ஆண்), சிப்பாய் தொழில்நுட்பம் உதவி அக்னிவீர் (பெண் ராணுவ காவல் பணி) சிப்பாய் தொழில் நுட்பம் உதவி, நர்சு, உதவி நர்சு (கால்நடை) மற்றும் ேஜ.சி.ஓ. (மத போதகர்) போன்ற பணியிடங்களுக்கு ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
நேரடி ஆட்சேர்ப்பின் போது www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு அனைத்து ஆவணங்க ளையும் உரிய படிவத்தில் நேரில் கொண்டு செல்ல வேண்டும். ஆட்சேர்ப்பில் எவ்விதமான தனி நபரையோ அல்லது முகவர்களையோ நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாயமானார்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா பின்னத்துறையை அடுத்த கொல் லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் ராஜசேகர் (வயது 20). இவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. இது தொடர்பாக பெரியண்ணன் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அங்கிருந்த விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு வாலிபர் உடல் கிடந்ததை சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை, ஒடுகத்தூர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்டு விசாரணை நடத் தினர். விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் காணா மல்போன ராஜசேகர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வேப்பங்குப்பம்போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் கால் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மார்க்கெட்டுக்கு பூ கொண்டுவந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பாலமதி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 41) விவசாயி.
இவர் நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு பைக்கில் பூ கொண்டு வந்தார். உடன் அவரது உறவினர் நவீன் குமார் (17) என்பவரும் வந்தார். இருவரும் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களை விற்பனைக்கு வழங்கி விட்டு பின்னர் வீடு திரும்பினர்
சாய்நாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு சிக்கன் கடை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்த கருணா மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். நவீன்குமார் படுகாயம் அடைந்தார்.
பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் புகார்
- திருநங்கைகள் பட்டா கேட்டு மனு
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம் குமரன் நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 12) இவருடைய தம்பி மனோஜ் (11) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இமானுவேல்) 13) ஆகியோர் கடந்த மாதம் 18-ந் தேதி அப்துல்லாபுரம் ஏரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பேரும் அங்கு உள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்து விட்டனர்.
இது குறித்து சிறுவர்களின் பெற்றோர் இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில் அப்துல்லாபுரம் ஏரியில் கோவில் கட்டுவதற்காக பொக்லைன் மூலம் 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி இருந்தனர்.அதில் விழுந்து எங்களுடைய மகன்கள் இறந்து விட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் பள்ளம் தோண்டியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
திருநங்கைகள் இலவச வீட்டு மனைகள் கேட்டு மனு அளித்தனர். வேலூரில் 90 பேரும் பேர்ணாம்பட்டில் 116 திருநங்கைகள் இதுவரை மனு அளித்துள்ளனர்.
எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- விழா மலரை ஜி.வி. சம்பத் வெளியிட்டார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தொடர் மருத்துவ கல்வி திட்டத்தின் கீழ் வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் வேலூர் கிளை இணைந்து வீரியதைராய்டு நோய்பாதிப்புகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனாவின் தாக்கம் ஆகிய தலைப்புகளில் நறுவீ மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. இதில் முன்னணி மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை புரவலரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் கருத்தரங்கு மலரினை வெளியிட்டார்.
கருத்தரங்கிற்கு வருகை தந்தவர்களை இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை துணைத் தலைவர் டாக்டர் நிலேஷ் வரவேற்றார். நறுவீ மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி நறுவீ மருத்துவமனை வசதிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்.
கருத்தரங்கில் வீரியதைராய்டு நோய் பாதிப்புகள் பற்றி நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனா நோய் தாக்கம் பற்றி மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயசீலாகாமராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முன்னதாக கருத்தரங்கின் நோக்கம் பற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை செயலாளர் டாக்டர் தானேஷ் குமார் விளக்கி கூறினார்.
கருத்தரங்கில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மதன் மோகன், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கோமதி, நறுவீ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய், தினேஷ் மருத்துவமனை டாக்டர் மணி இளங்கோ, கீதா மருத்துவமனை டாக்டர் சதீஷ் குமார், பாபா மருத்துவமனை டாக்டர் சபிதாலோகநாதன், சாரதாநாசிங் ஹோம் டாக்டர் சுஜாதா, சங்கரி மருத்துவமனை டாக்டர் முரளி, ஆர்.எம். மெடிக்கல் சென்டர் டாக்டர் ரவிசந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொதுமேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.
முடிவில் இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளை பொருளாளர் டாக்டர் திலகவதி நன்றி கூறினார்.






