என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. வேலூர் கார்த்திகேயன் எம். எல்.ஏ, ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்த்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்
- கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- மழை நீர் தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் அடுத்த கீழ் வெங்கடாபுரம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமார வேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
கிராமங்கள் தோறும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் உயர் கல்வி படிக்க வைக்க வேண்டும்.
தற்போது கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால் தடுப்பூசி செலுத்த வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பேசினார்.
இது எடுத்து வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மழைக்காலங்களில் பாலாற்றில் வரும் வெள்ள நீர் கீழவெங்கடபுரம், சம்பங்கி நல்லூர் ஊருக்குள் புகுந்து விடுவதால் கரையோரங்களில் மழை நீர் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.






