என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military technology"

    • வருகிற 15-ந் தேதி முதல் நடக்கிறது
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிவீர் (ஆண்), சிப்பாய் தொழில்நுட்பம் உதவி அக்னிவீர் (பெண் ராணுவ காவல் பணி) சிப்பாய் தொழில் நுட்பம் உதவி, நர்சு, உதவி நர்சு (கால்நடை) மற்றும் ேஜ.சி.ஓ. (மத போதகர்) போன்ற பணியிடங்களுக்கு ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    நேரடி ஆட்சேர்ப்பின் போது www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு அனைத்து ஆவணங்க ளையும் உரிய படிவத்தில் நேரில் கொண்டு செல்ல வேண்டும். ஆட்சேர்ப்பில் எவ்விதமான தனி நபரையோ அல்லது முகவர்களையோ நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×