என் மலர்
உள்ளூர் செய்திகள்

வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியாத்தத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு.
குடியாத்தத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
- வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்தது
- ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைந்த இந்தியாவின் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான ேநற்று தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி மற்றும் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், சாந்தி, கமலநாதன், ஜீவா உள்பட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
Next Story






