என் மலர்
நீங்கள் தேடியது "Petition for Transgender Band"
- கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் புகார்
- திருநங்கைகள் பட்டா கேட்டு மனு
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம் குமரன் நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 12) இவருடைய தம்பி மனோஜ் (11) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இமானுவேல்) 13) ஆகியோர் கடந்த மாதம் 18-ந் தேதி அப்துல்லாபுரம் ஏரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பேரும் அங்கு உள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்து விட்டனர்.
இது குறித்து சிறுவர்களின் பெற்றோர் இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில் அப்துல்லாபுரம் ஏரியில் கோவில் கட்டுவதற்காக பொக்லைன் மூலம் 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி இருந்தனர்.அதில் விழுந்து எங்களுடைய மகன்கள் இறந்து விட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் பள்ளம் தோண்டியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
திருநங்கைகள் இலவச வீட்டு மனைகள் கேட்டு மனு அளித்தனர். வேலூரில் 90 பேரும் பேர்ணாம்பட்டில் 116 திருநங்கைகள் இதுவரை மனு அளித்துள்ளனர்.
எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.






