என் மலர்
வேலூர்
- சிப்பி காளான் பிரியாணி, மாப்பிள்ளை சம்பா கஞ்சி, நவதானிய புட்டு என வகைவகையாக உள்ளது
- களை கட்டும் வேலூர் கலெக்டர் அலுவலகம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படும்.
இது ஒரு புறம் இருக்க தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் விற்பனை அங்காடி செயல்பட்டு வருவதால் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக வளாகம் களைகட்டி வருகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுவாயில் பகுதியில் மகளிர் குழுவினர் விற்பனை ஸ்டால்கள் வைத்துள்ளனர்.
இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மனத்தக்காளி, முடக்கத்தான், பொன்னி, கீழா நெல்லி, தூதுவளை, பிரண்டை கீரைகள், மலை கிராமங்களில் வளர்ந்த செழிப்பான கொய்யா, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்கீரை, முள்ளங்கி, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என இயற்கை காய்கறிகளை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதை தவிர தானிய வகை தின்பண்டங்களுக்கும் பஞ்சமில்லை.
மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி, சிறுதானிய சிமினி, சிப்பி காளான் சூப், சிப்பி காளான் பிரியாணி, நாட்டு பசும் பாலில் செய்யப்பட்ட பால்கோவா விதவிதமான புட்டு வகைகள் வேர்க்கடலை சுண்டல் என உடலுக்கு ஆரோக்கிய தரும் நவதானிய பொருட்களும் உள்ளன.
மேலும் நவதானியங்களில் இருந்து செய்யப்பட்ட முறுக்கு பிஸ்கட் வகைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
மகளிர் சுய உதவி குழுவினரால் செய்யப்பட்ட அலங்கார பொருட்களும் இந்த இடத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
பாக்கு மட்டைகளால் செய்யப்பட்ட தட்டு பைகள் திருமண அலங்கார பொம்மைகள் வரவேற்பு தட்டுகள் பெண்களுக்கான ஜாக்கெட் துணி வகைகள் உள்ளன.
திருமண வரவேற்பு தட்டுகள் விலைக்கு மற்றும் வாடகைக்கு வழங்குவதாக மகளிர் குழுக்கள் தெரிவித்தனர்.
இங்கு ஒரு பத்து ரூபாய் முதல் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது.
திங்கட்கிழமை தோறும் இங்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பலர் இங்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
- 50 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள கல்லுட்டை கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.
இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.
5 பிரிவுகளாக, 2 நாட்களாக நடைபெற்ற போட்டி இன்று காலை நிறைவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
மேலும் விளையாட்டின் முடிவில் முதலாவது பரிசாக 9அடி கோப்பையை ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 8 அடி கோப்பை மற்றும் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.
இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.
2 நாட்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
- நடிகர் விஜய் 30-வது ஆண்டு கலையுலக பயணத்தையொட்டி வழங்கினர்
- இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
நடிகர் விஜயின் திரையுலக கலை பயணம் 30-ம் ஆண்டு முன்னிட்டு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆலோசனை படி இன்று காலையில் ஓடை பிள்ளையார் கோயிலில் அபிஷேகமும் வேலூர் மாவட்ட தலைமை இளைஞரணி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் நடந்தது. அதனை தொடர்ந்து காட்பாடியிலுள்ள ஆத்மா சாந்தி முதியோர் இல்லத்தில் அங்குள்ள முதியவர்களுக்கு போர்வை மற்றும் காலை உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கருணாகரன்,
பொருளாளர் வெங்கட், துணைத் தலைவர் சாரங்கன், மாநகர இளைஞரணி தலைவர் ரியாஸ், காட்பாடி ஒன்றிய தலைவர் நவீன், ஒன்றிய நிர்வாகிகள் சுகுமார், வினோத், அணைக்கட்டு ஒன்றிய தலைவர் ஹரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது
- கார்த்திகேயன் எம்.எல்.ஏ.பேரணியை தொடங்கி வைத்தார்
வேலூர்:
உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் மாதம் இன்றும், நாளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வேலூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையிலிருந்து நேற்று தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மைய ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
தன்னார்வலர்கள் மணிவண்ணன், சிவசங்கரன், உமா சந்திரன், சதீஷ், குணசீலன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையில் இருந்து கிரீன் சர்க்கிள் சென்று அங்கிருந்து அண்ணா சாலை வழியாக அண்ணா நகரில் உள்ள ஈஷா மையத்தை அடைந்தது.
மண் வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கி உள்ளார்.
மார்ச் மாதம் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
- 6 ஆயிரம் பேர் எழுதினர்
- போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 40 கிராம உதவியாளர் பணிக்கு இன்று எழுத்து தேர்வு நடந்தது. 40 காலி பணியிடங்களுக்கு மொத்தம் 6000 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர்.
வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகம், குடியாத்தம் கே. எம். ஜி கல்லூரி, கே.வி.குப்பம் வித்யா லட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் பேரணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் இன்று எழுத்து தேர்வு நடந்தது.
இன்று காலை 9:30 மணிக்குள் வந்த தேர்வர்கள் மட்டும் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்தவர்களை திருப்பி அனுப்பினார். தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பாக தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்பு அனுப்பி வைத்தனர்.
அவர்களிடம் இருந்த செல்போன் புத்தக மற்றும் மின்னணு சாதகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைத்தனர்.தேர்வு நடைபெறுவதை ஒட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- நிலத்தகராறில் பயங்கரம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த மராட் டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் நாயுடு. இவரது மகன்கள் தட்சணா மூர்த்தி (வயது 49), சுந்தர மூர்த்தி, சரவணன் (41). அண்ணன் - தம்பிகளான இவர்களுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் சுமார் 3 ஏக்கர் 88 சென்ட் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் இவர்கள் 3 பேருக்கும் இடையே பிரச்சினை வந்ததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் ஊர் பெரியவர் கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக தட்சணா மூர்த்தி தெரிவித்தார். அதன் படி வழக்கை வாபஸ் பெற் றார்.இந்த நிலையில் தட்ச ணாமூர்த்தி நேற்று காலை அவருக்குரிய இடத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டு இருந்தார். அப் போது அங்கு வந்த தட்சணா மூர்த்தியின் கடைசி தம்பி சரவணன், கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ஏன் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட் டுள்ளார்.
இதனால் தட்சணாமூர்த் திக்கும் சரவணனுக்கும் தக ராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சரவணன் நிலத்தில் இருந்த கல்லால் தட்சணா மூர்த்தியை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது தம்பி
சுந்தரமூர்த்தி, அண்ணனை இப்படி கல்லால் அடித்து இருக்கின்றாயே என்று கேட் டுள்ளார். அதற்கு சரவணன் ஒன்று சேர்ந்து என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கி றாய் என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தர மூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். படுகாயம் அடைந்தநிலையிலும் தடுக்க வந்த தட்சணாமூர்த்தியையும் கத்தியால் குத்திய சரவணன்தப்பி சென்று விட்டார். நிலைகுலைந்து மயங்கி விழுந்த தட்சணாமூர்த்தி மற் றும் சுந்தரமூர்த்தியை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஒடு கத்தூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டனர். இது குறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் கிராமத்தில் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கி கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.
கண் சிகிச்சை முகாமில், கண் புரை, கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல், ஒற்றை தலைவலி, வெள்ளெழுத்து, சாலேஸ்வரம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணாடி தேவைபட்டவர்களுக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் மேல் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், தனி வட்டாச்சியர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் குமார், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன் பங்கேற்றனர்.
- பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நடவடிக்கை
- வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தல்
வேலூர்:
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை வாயிலாக பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையொட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்பு பொருட்களும் கூட்டுறவுத்துறை மூலம் தான் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் கார்டுதாரர்கள் வங்கி கணக்கு சேகரித்து பதிவு செய்து வருகின்றனர்.ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விவரம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனால் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காதவர்களிடம் ஆதார் எண் இணைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்களது வங்கி கணக்கில் உடனடியாக சென்று ஆதார் இணைத்துக் கொள்ள வேண்டும்.
வங்கி கணக்கு எதுவும் இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் பணம் இல்லா வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பான பணிகளை ரேசன் கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக நேற்று உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் எந்த காரணத்தைக் கொண்டும் ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் நம்பரை கேட்கக்கூடாது.
வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அவர்களை உடனடியாக வங்கிக்கு சென்று ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்கி ஆதார் நம்பரை இணைத்து விவரங்களை ரேஷன் கடையில் தெரிவிக்கும்படி அறிவுறுத்த வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் துறை அலுவலர்கள் ரேசன் கார்டுதாரர்களிடம் ஆதார் அட்டை நகலை பெறக்கூடாது என அறிவித்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதில் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ரூ.1000-யை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
- வேலூரில் பயணிகள் அவதி
- முறைகேடாக குலுக்கல் நடத்தியாக குற்றம் சாட்டியுள்ளனர்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படாததால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.ஏற்கனவே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் 4 முறை ரத்து செய்யப்பட்டது.
புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த 12 வியாபாரிகள் தங்களுக்கு கடை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களுக்கு கடை ஒதுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் 3 பேருக்கு கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் தனித்தனியாக குலுக்கல் முறையில் கடை ஒதுக்கும்பணி நடந்தது. ஆனால் 3 பேருக்கும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கான எண்கள் குலுக்களில் வந்தது.
இதற்கு வியாபாரிகள் தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை. முறைகேடாக குலுக்கல் நடத்தியாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீண்டும் குலுக்கள் நடத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
ஆனால் அவர் கடைகளை ஏற்க மறுத்தால் பொது ஏலத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-
கோர்ட்டு அறிவுறுத்தல் படி பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்கல் தொடங்கி முடிந்த பிறகு முறைகேடு மோசடி என குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் மீண்டும் வேறு சீட்டை எடுக்க அனுமதித்தால் குலுக்கலுக்கான அடிப்படையே தவறாகிவிடும்.ஒரு முறை தான் அனுமதிக்கப்படும் மற்றவர்களுக்கு தான் அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். தரைத்தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் கடைகள் வேண்டும் என அவர்கள் செயல்படுகின்றனர்.
அவர்களுக்கு ஒரு வாரம் கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கடைக்கான தொகையை மாநகராட்சியில் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் குலுக்கலில் விழுந்த கடைகளும் பொது ஏலத்திற்கு கொண்டுவரப்படும். விரும்பிய கடை தான் வேண்டும் என கேட்பவர்கள் பொது ஏலத்தில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளோம் என்றார்.
புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விழுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- என்.சி.சி. 10-வது பட்டாலியன் சார்பில் நடந்தது
- 100 பேர் கலந்து கொண்டனர்
வேலூர்:
பிரதமர் தொடங்கிய "புனித் சாகர் அப்யான்" திட்டப்படி காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியனின் என்சிசி மாணவர்கள் பாலாற்றில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
என்சிசி 10-வது பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ். கே. சுந்தரம், என்சிசி மக்கள் தொடர்பு அலுவலர் க. ராஜா, என்சிசி அலுவலர்கள் லெப்டினன்ட் காயத்திரி, லெப்டினன்ட் ஷைனி, லெப்டினன்ட் பரசுராமன், சுபேதார் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுபேதார் தினேஷ்சிங், ராணுவ வீரர்கள் அவில்தார்கள் வெங்கடேசன், தீபு, துரைமுருகன், ரஞ்சித், சுனில்தத் உள்பட பலர் பாலாறு சுத்தம் செய்யும் பணியை ஒருங்கிணைத்தனர்.
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, தனபாக்கியம் மகளிர் கல்லூரி, ஊரீஸ் கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலா சுத்தம் செய்தனர்.
- லேட்டா வந்த ஆப்செண்ட் போடுவியா என வாக்குவாதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த புளியமரத்தூர் அருகே உள்ள கட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 35). இவர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி(40). இவர் நூறு நாள் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தாமோதரன் நூறு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை வருகை பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தார். மேலும், பணிக்கு வராதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டார்.
அப்போது, ஜெயலட்சுமி பணிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த தாமோதரன் உங்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மற்றவங்க லேட்டா வந்தா ஏத்துப்ப நான் லேட்டா வந்த ஆப்செண்ட் போடுவியா என வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரின் கணவர் ராஜேந்திரன் சேர்ந்து பணித்தள பொறுப்பாளர் தாமோதரனை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த தாமோதரன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பணிதளப் பொருப்பாளரை மாற்ற வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்தையையடுத்து கலைந்து சென்றனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள திப்பச்சமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 850 பேர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இங்கு திப்பச முத்திரம், குச்சிப்பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்து இரண்டு பிரிவுகாளாக பிரிந்து 100 நாள் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது செய்து வரும் 100 நாள் வேலையை சரியாக வழங்க வில்லை எனவும், பணிதளப் பொருப்பாளரை மாற்ற வேண்டும் எனவும் பல நாட்களாக அதிகாரிகளிடம் கூறிவந்துள்ளனர்.
அதிகாரிகள் இதனை கண்டுக்கொள்ளாமல் இருந்த நிலையில் சரியான முடிவு கிடைக்காததால் ஆத்திரமடைந்த பணியாட்கள் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் வேலையாட்களின் கோரிக்கையை ஏற்று பனிதளப் பொருப்பாளரை மாற்றியும், நாளை முதல் தொடர்ந்து அனைவருக்கும் வேலை வழங்குவதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் இரு கிராமத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு அந்தந்தப்ப குதியை சேர்ந்த நபர்களை பணி பொருப்பாளராக பணியாற்றுவார் என போலீசார் மற்றும் அதிகாரிகளின் கூறினர். இதனையடுத்து கலைந்து சென்றனர்.






