என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாறு சுத்தம் செய்யும் பணி
    X

    பாலாறு சுத்தம் செய்யும் பணி

    • என்.சி.சி. 10-வது பட்டாலியன் சார்பில் நடந்தது
    • 100 பேர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    பிரதமர் தொடங்கிய "புனித் சாகர் அப்யான்" திட்டப்படி காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியனின் என்சிசி மாணவர்கள் பாலாற்றில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

    என்சிசி 10-வது பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ். கே. சுந்தரம், என்சிசி மக்கள் தொடர்பு அலுவலர் க. ராஜா, என்சிசி அலுவலர்கள் லெப்டினன்ட் காயத்திரி, லெப்டினன்ட் ஷைனி, லெப்டினன்ட் பரசுராமன், சுபேதார் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுபேதார் தினேஷ்சிங், ராணுவ வீரர்கள் அவில்தார்கள் வெங்கடேசன், தீபு, துரைமுருகன், ரஞ்சித், சுனில்தத் உள்பட பலர் பாலாறு சுத்தம் செய்யும் பணியை ஒருங்கிணைத்தனர்.

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, தனபாக்கியம் மகளிர் கல்லூரி, ஊரீஸ் கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலா சுத்தம் செய்தனர்.

    Next Story
    ×