search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடைகளில் வங்கி கணக்கு விவரம் சேகரிப்பு தீவிரம்
    X

    காட்பாடியில் உள்ள ரேசன் கடையில் வங்கி கணக்கு இணைக்கும் பணி இன்று நடந்தது.

    ரேசன் கடைகளில் வங்கி கணக்கு விவரம் சேகரிப்பு தீவிரம்

    • பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நடவடிக்கை
    • வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தல்

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை வாயிலாக பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையொட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்பு பொருட்களும் கூட்டுறவுத்துறை மூலம் தான் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் கார்டுதாரர்கள் வங்கி கணக்கு சேகரித்து பதிவு செய்து வருகின்றனர்.ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விவரம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனால் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காதவர்களிடம் ஆதார் எண் இணைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    அவர்கள் தங்களது வங்கி கணக்கில் உடனடியாக சென்று ஆதார் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    வங்கி கணக்கு எதுவும் இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் பணம் இல்லா வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பான பணிகளை ரேசன் கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக நேற்று உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் எந்த காரணத்தைக் கொண்டும் ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் நம்பரை கேட்கக்கூடாது.

    வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அவர்களை உடனடியாக வங்கிக்கு சென்று ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்கி ஆதார் நம்பரை இணைத்து விவரங்களை ரேஷன் கடையில் தெரிவிக்கும்படி அறிவுறுத்த வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் துறை அலுவலர்கள் ரேசன் கார்டுதாரர்களிடம் ஆதார் அட்டை நகலை பெறக்கூடாது என அறிவித்தப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதில் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ரூ.1000-யை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    Next Story
    ×