என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியோர்களுக்கு உணவு, போர்வை
    X

    முதியோர்களுக்கு போர்வை வழங்கிய காட்சி.

    முதியோர்களுக்கு உணவு, போர்வை

    • நடிகர் விஜய் 30-வது ஆண்டு கலையுலக பயணத்தையொட்டி வழங்கினர்
    • இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    நடிகர் விஜயின் திரையுலக கலை பயணம் 30-ம் ஆண்டு முன்னிட்டு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆலோசனை படி இன்று காலையில் ஓடை பிள்ளையார் கோயிலில் அபிஷேகமும் வேலூர் மாவட்ட தலைமை இளைஞரணி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் நடந்தது. அதனை தொடர்ந்து காட்பாடியிலுள்ள ஆத்மா சாந்தி முதியோர் இல்லத்தில் அங்குள்ள முதியவர்களுக்கு போர்வை மற்றும் காலை உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கருணாகரன்,

    பொருளாளர் வெங்கட், துணைத் தலைவர் சாரங்கன், மாநகர இளைஞரணி தலைவர் ரியாஸ், காட்பாடி ஒன்றிய தலைவர் நவீன், ஒன்றிய நிர்வாகிகள் சுகுமார், வினோத், அணைக்கட்டு ஒன்றிய தலைவர் ஹரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×