என் மலர்tooltip icon

    வேலூர்

    • கழிவறையில் தூக்கில் தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. மண்டித் தெருவில் அரிசி மண்டி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    2-வது மகன் ராமு (வயது 40) தந்தையுடன் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

    ராமு தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

    திருமணமாகாத விரக்தியில் இருந்த ராமு இன்று காலை அவர்களது வீட்டின் மாடியில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்பாடியில் ரெயிலில் ஏறிய போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் அமிரூல் இஸ்லாம். இவருடைய மனைவி பர்வீன் (வயது 40). சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். நேற்று சென்னை சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடிவு செய்தனர்.

    இதற்காக நேற்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். 2-வது பிளாட்பாரத்தில் சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்போது அமிரூல்இஸ்லாம் மற்றும் அவரது மகள் ரெயிலில் ஏறினர். அதிக பைகள் இருந்ததால் பர்வீன் ஒவ்வொரு பையையும் ரெயில் படிக்கட்டு அருகே வாசலில் ஏற்றி வைத்துவிட்டு கடைசியாக ஒரு பையை எடுத்துக் கொண்டு ரெயிலில் ஏறினார்.

    அதற்குள் ரெயில் புறப்பட்டது.அப்போது பர்வீன் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.

    இதனைக் கண்ட அவருடைய கணவர் மற்றும் மகள் அலறி கூச்சலிட்டனர். மற்ற பயணிகளும் சத்தம்போட்டனர். அதற்குள் ரெயில் மற்றும் பிளாட்பாரம் இடையே சிக்கிய பர்வீன் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பர்வினை மீட்டு வேலூர் சிஎம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பர்வீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அவரது உடல் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு வந்து இடத்தில் பர்வீன் பலியானதை கண்டு அமிரூல்இஸ்லாம் மற்றும் அவரது மகள் அழுது துடித்தனர். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் ஏறும்போது பயணிகள் கவனமுடன் ஏற வேண்டும்.ஓடும் ரெயில்களில் எந்த காரணத்தைக் கொண்டும் ஏற முயற்சி செய்ய வேண்டாம் என ெரயில்வே போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    • பர்வீன் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.
    • காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பர்வினை மீட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வேலூர்:

    பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் அமிரூல் இஸ்லாம். இவருடைய மனைவி பர்வீன் (வயது 40). சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். நேற்று சென்னை சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடிவு செய்தனர்.

    இதற்காக நேற்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். 2-வது பிளாட்பாரத்தில் சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது அமிரூல் இஸ்லாம் மற்றும் அவரது மகள் ரெயிலில் ஏறினர். அதிக பைகள் இருந்ததால் பர்வீன் ஒவ்வொரு பையையும் ரெயில் படிக்கட்டு அருகே வாசலில் ஏற்றி வைத்துவிட்டு கடைசியாக ஒரு பையை எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறினார்.

    அதற்குள் ரெயில் புறப்பட்டது. அப்போது பர்வீன் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.

    இதனைக் கண்ட அவருடைய கணவர் மற்றும் மகள் அலறி கூச்சலிட்டனர். மற்ற பயணிகளும் சத்தம் போட்டனர். அதற்குள் ரெயில் மற்றும் பிளாட்பாரம் இடையே சிக்கிய பர்வீன் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பர்வினை மீட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பர்வீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அவரது உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு வந்த இடத்தில் பர்வீன் பலியானதை கண்டு அமிரூல்இஸ்லாம் மற்றும் அவரது மகள் அழுது துடித்தனர். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் ஏறும்போது பயணிகள் கவனமுடன் ஏற வேண்டும். ஓடும் ரெயில்களில் எந்த காரணத்தைக் கொண்டும் ஏற முயற்சி செய்ய வேண்டாம் என ரெயில்வே போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    • அலுவலக அறை கதவுகளை மூடி விட்டு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேஜைகளில் சோதனை நடத்தினர்.
    • மகளிர் திட்ட அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    புத்தாண்டு முன்னிட்டு அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளை சந்தித்து அன்பளிப்பு வழங்குவதும் அதை லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்டுபிடித்து பிடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    அந்த வகையில் வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக கட்டிடத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் புத்தாண்டு முன்னிட்டு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் மகளிர் திட்ட அலுவலகத்திற்கு வந்தனர்.

    அலுவலக அறை கதவுகளை மூடி விட்டு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேஜைகளில் சோதனை நடத்தினர்.

    பின்னர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கணக்குகள், விழாக்களின் போது செலவழிக்கப்படும் பணம் குறித்த ஆவணங்கள் உட்பட பல ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும் படியாக இருந்த சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். மதியம் 12 மணியிலிருந்து தொடர்ந்து 4 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

    மகளிர் திட்ட அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளிர் திட்ட அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை அதன் அருகில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
    • ஜெயில் காவலர்களையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர்.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஜெயிலில் தண்டனை, விசாரணை கைதிகளாக 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் வேலூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினி, கருணாகரன், சாஹிப் மற்றும் 72 போலீசார் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் 'திடீர்' சோதனை நடத்தினர்.

    முதலில் கைதிகள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த அறைகளை போலீசார் சோதனையிட்டனர். கைதிகளை தீவிரமாக சோதனை செய்து வெளியே அனுப்பி விட்டு அவர்களின் அறைகள் மற்றும் கழிவறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். குறிப்பாக போலீசாரின் உயர் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பொது கழிவறை, குளியலறையில் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயில் காவலர்களையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர்.

    அதே நேரத்தில் பெண்கள் ஜெயிலிலும் சோதனை நடத்தினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் சோதனை சிக்கியது
    • 17 கிலோ பறிமுதல்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பகுதியில் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடுத்தெரு பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது முகமது இப்ராஹிம் (வயது 46), அதே பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (34). ஆகியோர் வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    2 மூட்டைகளில் இருந்த 17 கிலோ எடை கொண்ட குட்கா ேபான்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 25ஆயிரம் இருக்கும் எனகூறப்படுகிறது.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
    • எம்.எல்.ஏ, மேயர் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் கோட்டை வளாகத்தில் காலை மாலை என இரு வேளைகளில் ஏராளமானார் நடை பயிற்சி செய்து வருகின்றனர்.

    மேலும் கோட்டையினுள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்க வேண்டும் என வேலூர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ 12 லட்சம் மதிப்பில் கிரானைட் கற்களால் ஆன 50 இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இருக்கைகள் அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து மேயர் கூறுகையில், இருக்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்ததும் இருக்ககைள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

    • ஜெயிலில் அடைப்பு
    • தங்க செயின், 2 மோதிரங்கள் பறிமுதல்

    வேலூர்:

    கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடந்த ஜூன் மாதம் ரெயில் பயணிகள் பைகளில் வைத்திருந்த நகைகள் திருடு போனது.

    இதுகுறித்து சென்னையை சேர்ந்த ரெயில் பயணிகள் பெரம்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு இது குறித்த தகவல்களை அனுப்பி வைத்தனர்.

    ரெயிலில் திருடிய கும்பலை பிடிக்க காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

    நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக அங்கும் அங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்தனர்.அவர் பெங்களூரை சேர்ந்த வினோத் (வயது 39) என்பது தெரிய வந்தது. அவரிடம் ரெயில் டிக்கெட் இல்லை.அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத் கோவை இன்டர்சிட்டி மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கி கொண்டிருந்த பயணிகளின் பைகளில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்து 3 பவுன் எடை கொண்ட தங்க செயின் மற்றும் 2 மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை பெண்ட்லென்ட் அரசு ஆஸ்பத்திரி அருகே பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மாதந்தோறும் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக உண்டியல் திறக்கப்ப டவில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.

    இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு திடுக்கின்றனர்.

    இது குறித்து வேலூர் தெற்கு குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகி ன்றனர். வேலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2008 ருத்ராட்சை அணிவித்து சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் எழுந்தருளிய சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உமா மகேஷ்வரி உடனுறையான கைலாயனாதர் கோயில் உள்ளது. இங்கு அனைத்து விதமான பிரதோஷம், சிவராத்திரி போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெறும்.

    இதே போல் நேற்று மகா சிவராத்திரி பிரதோஷ விழாவை முன்னிட்டு உமா மகேஷ்வரி உடனுறையான கைலாயநாதருக்கு முதலில் பசும்பால், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின்னர் சுவாமியின் மீது 2008 ருத்ராட்ச மாலைகளை பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரையும் தரிசனத்திற்க்கு அனுமதிக்கப்பட்டது.

    இந்த விழாவில் பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கைலாயநாதரை வழிபட்டு சென்றனர்.

    • ரெயிலில் திருடிய கும்பலை பிடிக்க காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.
    • காட்பாடி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

    வேலூர்:

    கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடந்த ஜூன் மாதம் ரெயில் பயணிகள் பைகளில் வைத்திருந்த நகைகள் திருடு போனது.

    இதுகுறித்து சென்னையை சேர்ந்த ரெயில் பயணிகள் பெரம்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு இதுகுறித்த தகவல்களை அனுப்பி வைத்தனர்.

    ரெயிலில் திருடிய கும்பலை பிடிக்க காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

    நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்தனர். அவர் பெங்களூரை சேர்ந்த வினோத் (வயது 39) என்பது தெரிய வந்தது. அவரிடம் ரெயில் டிக்கெட் இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத் கோவை இன்டர்சிட்டி மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கி கொண்டிருந்த பயணிகளின் பைகளில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்து 3 பவுன் எடை கொண்ட தங்க செயின் மற்றும் 2 மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன
    • வியாபாரிகள் மகிழ்ச்சி

    வேலூர்:

    பொய்கைச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன்மூலம், சுமார் ரூ.1 கோடிக்கு கால் நடை விற்பனை நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    பொய்கையில் வாரந்தோறும் செவ் வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்க ளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடு கள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு கறவை மாடுகள்,காளைகள், உழவு மாடுகள், எரு மைகள் என 2,000-க்கும் அதிகமான மாடு கள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில், சுமார் ரூ.1 கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடைபெற் றது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:-

    கடந்த சில வாரங்களாகபொய்கைச் சந்தையில் கால்நடை வர்த்தகம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரி த்திருந்தது. விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.

    குறிப்பாக, கறவை மாடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது என்றனர்.

    ×