என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் 4 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- அலுவலக அறை கதவுகளை மூடி விட்டு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேஜைகளில் சோதனை நடத்தினர்.
- மகளிர் திட்ட அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
புத்தாண்டு முன்னிட்டு அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளை சந்தித்து அன்பளிப்பு வழங்குவதும் அதை லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்டுபிடித்து பிடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.
அந்த வகையில் வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக கட்டிடத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் புத்தாண்டு முன்னிட்டு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் மகளிர் திட்ட அலுவலகத்திற்கு வந்தனர்.
அலுவலக அறை கதவுகளை மூடி விட்டு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேஜைகளில் சோதனை நடத்தினர்.
பின்னர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கணக்குகள், விழாக்களின் போது செலவழிக்கப்படும் பணம் குறித்த ஆவணங்கள் உட்பட பல ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும் படியாக இருந்த சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். மதியம் 12 மணியிலிருந்து தொடர்ந்து 4 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
மகளிர் திட்ட அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளிர் திட்ட அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை அதன் அருகில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.






