என் மலர்
நீங்கள் தேடியது "உண்டியல் உடைத்து திருட்டு"
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை பெண்ட்லென்ட் அரசு ஆஸ்பத்திரி அருகே பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாதந்தோறும் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக உண்டியல் திறக்கப்ப டவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.
இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு திடுக்கின்றனர்.
இது குறித்து வேலூர் தெற்கு குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகி ன்றனர். வேலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாணியம்பாடி கோவில்களில் உண்டியல் உடைத்து கைவரிசை
- சி.சி.டி.வி. கேமரா மூலம் சிக்கினர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த தெக் குப்பட்டு கிராமத்தில் ஏரிக்கரையோரம் பெருமாள் கோவில் மற்றும் ஓம்சக்தி கோவில் ஆகிய 2 கோவில்களள் அமைந்துள்ளது.
இந்தக் கோவில்களில் தினமும் பூஜை செய்து வழக்கம். பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்கின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை 'உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். கோவிலில் திருடிவிட்டு தப்பி சென்ற ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த ராஜவேலு (வயது 28), சேகர் (27) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.






