என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை பெண்ட்லென்ட் அரசு ஆஸ்பத்திரி அருகே பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாதந்தோறும் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக உண்டியல் திறக்கப்ப டவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.
இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு திடுக்கின்றனர்.
இது குறித்து வேலூர் தெற்கு குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகி ன்றனர். வேலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






