என் மலர்
வேலூர்
- விபத்தில் சரவணன் மற்றும் நிஷாந்த் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
- தந்தை, மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வேலூர்:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 36) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் நிஷாந்த் (4) நேற்று முன்தினம் இவர்கள் வேலூர் ஆர் என் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.நேற்று மாலை மீண்டும் காஞ்சிபுரத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
சத்துவாச்சாரி வசூரில் உள்ள அம்மன் கோவில் எதிரே சென்றபோது பின்னால் வந்த பைக் சரவணன் பைக் மீது மோதியது.இந்த விபத்தில் சரவணன் மற்றும் நிஷாந்த் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல பின்னால் பைக்கில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கீதா அவரது 16 வயது மகன் காரில் சென்னை நோக்கி வந்தனர்.
விபத்தை பார்த்த உடனே அவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். 4 வயது குழந்தையை மீட்டு காலதாமதம் இன்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அந்த நேரத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
காயமடைந்த நிஷாந்துக்கு கீதா விரைவாக ரத்தினகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல போலீஸ் சூப்பிரண்டு தனது காரை வழங்கினார்.
அதில் தந்தை, மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
குழந்தையை கீதா தனது தோளில் சுமந்தபடி வேகமாக தூக்கிக்கொண்டு ஓடி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தன்னுடைய குழந்தை போல நினைத்து கீதா விபத்தில் காயம் அடைந்த குழந்தையை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்ததை கண்ட டிஐஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை விரைவாக சேர்ப்பதன் மூலம் விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்றலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
- 3 பேரை தேர்வு செய்தனர்
- கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினர்
வேலூர்:
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி, மற்றும் ஓவியப்போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு சென்னையில் நடத்தப்பட்டது.
இப்போட்டியினை நடுவர்கள் திருப்பூர் கிருஷ்ணன் கிருங்கை சேதுபதி, தமிழ் மகன் ஆகியோர் நடத்தினர்.
போட்டியின் இறுதியில் 3 பிரிவுகளிலும் தலா 3 பேரை தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்றவர்கள் இத்திருக்குறள் பேச்சுப் போட்டியில் 3 பிரிவுகளின் கீழ், தலா மூன்று பேர் வெற்றி பெற்றனர். இடைநிலை பிரிவில் முதல் இடத்தை ஈரோடு மண்டலத்தை சார்ந்த வி.நா.தமிழ்க் கணி, 2-ம் இடத்தை, கோவை மண்டலத்தை சார்ந்த பா.ஹரிஷினி, வேலூர் மண்டலத்தை சார்ந்த ஆதிரை, 3-ம் இடத்தை சென்னை மண்டலத்தை சார்ந்த ஸ்ரீ பத்மப்ரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பாக, முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.10,000, 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.7,500, 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம், (42) இவர் நேற்று மாலை தனது பைக்கில் கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார்.
அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி அருணாச்சலம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரிக்கு அடியில் பைக் சிக்கி நொறுங்கியது.
படுகாயம் அடைந்த அருணாச்சலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி இருந்த வாகனத்தை மீட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 5 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
- போலீசார் தேடி வருகின்றனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை, குண்ராணி மலைப்பகுதியில் நீர் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் நீரோடையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தேடிபார்த்தனர்.
பின்னர் நீரோடையின் அருகில் நீர் தேக்க பேரல்கள் இருப்பதை பார்த்தனர்.
அதனை நோக்கி செல்லும் போது அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் திடீரென தப்பி ஓடினர்.
இதனையடுத்து தீவிரமாக தேடி ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெள்ளம், பட்டைகள் கலந்து 9 பேரல்களில் ஊற வைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராய ஊறலை கீழே தள்ளி அழித்தனர். இதன்பின் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டு இருந்த அனைத்து பொருட் களையும் தீயிட்டு கொளுத்தினர்.
தப்பி ஓடிய சாராய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- இடம் குறித்து நாளை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்து வதற்கு அனுமதி கோரி 182 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. அவற்றின் மீது பரிசீலனை செய்யப்பட்டு நாளை இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்தப் படுவது வழக்கம். இந்த விழாக்கள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப் படுகிறது.
இந்த விண்ணப் பங்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு எருது விடும் விழா நடத்துவதற்கான அனுமதி கோரும் விண்ணப் பங்கள் ஆன்லைன் மூலம் வந்து சேருவதற்கு நேற்று முன்தினம் மாலை (வெள்ளிக் கிழமை) கடைசி என்று அறி விக்கப்பட்டது.
எருது விடும் விழாக்கள் அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே நடத்த வேண்டும். காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட பிறகே அனு மதிக்கப்படும்.
செயல் திறனை அதிகரிக்கும், எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளைகளுக்கு அனுமதியில்லை. ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஒட அனுமதிக்கப்படும்.காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற் கொண்டும் விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.
விழா முடிந்ததும் காளை களுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்திட அனுமதி கோரி நேற்று முன்தினம் மாலை வரை மொத்தம் 182 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீது பரிசீலனைக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள், இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆன்லைனில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
- 182 விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனுமதிகோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் முகவரி மூலம் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும்.
விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் நேற்று மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் முறையில் பெறப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே மாடுவிடும் விழா நடத்த வேண்டும். காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படும்.
செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளைகளுக்கு அனுமதியில்லை.
ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும். காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும். விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.
விழா முடிந்தும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும் செல்லவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை எருது விடும் விழா நடத்த அனுமதி கோரி 182 விண்ணப்பம் அளிக்க பட்டுள்ளது.
வருகிற 9-ந் தேதி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள் மற்றும் இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- தொடர்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ். மானியம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 25).பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
நிர்மல் தொடர்ந்து வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்தார். அவரை வேலூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி நிர்மல் குண்டர்சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- பொதுமக்களுக்கு பலர் பயன் பெற்றனர்
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிமேகலைஜெயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக ஆற்காடு எம். எல் .ஏ. ஈஸ்வரப்பன், கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.
- பூட்டை உதை்து துணிகரம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பெரியஊனை கிராமத்தை சேர்ந்த வர் ராமசாமி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 29). ராணுவ வீரர். இவர் தனது மனைவி பிரசவத்திற்காக விடுமு றையில் வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு அணைக்கட்டு அருகே மலைச்சந்து கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மீண்டும் மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத் திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் அவரது மனைவியின் பள்ளிச் சான்றுகள் உள்ளிட்டவைகளை மர்ம கும்பல் திருடிச்சென் றது தெரிய வந்தது.
இது குறித்து வெங்கடேசன் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த கவர்னர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
- தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை வேறு கலாச்சாரத்தில் உள்ளனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கவர்னர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது. தமிழகம் என சொல்ல வேண்டும் என கூறுகிறார்.
தமிழகத்தை எப்படி அழைக்க வேண்டும் என கவர்னர் சொல்லித்தர வேண்டாம். தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு. இதுபோன்ற பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம்.
தமிழ்நாடு, ஆந்திர நாடு என பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. இந்தியா ஒரு தேசம்.
நாடு என்பது வேறு தேசம் என்பது வேறு. நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம் என்று நாம் சொல்லுகிறோம்.
அனைவரும் சேர்ந்ததுதான் இந்தியா. இதனால்தான் இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என மகாத்மா காந்தி தெரிவித்தார்.
இவையெல்லாம் கவர்னருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. கவர்னர் கூறிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம்.
நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த கவர்னர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்களின் திருவிழாக்களுக்கு முதல்வர் வாழ்த்து சொல்வாரா என பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர்
தமிழர் திருநாள் என்று சொல்லக்கூடிய பொங்கல் தமிழர் பண்டிகை இந்து பண்டிகை தானே. இதற்கும் வாழ்த்து சொல்கிறோம் அல்லவா.
பா.ஜ.க.வினர் தமிழர் பண்டிகையை பொங்கல் பண்டிகையாக கருதவில்லையா. பொங்கல் பண்டிகை வெளிநாட்டு கலாச்சாரத்தில் இருந்து வந்ததா. பொங்கல் என்பது இந்து கலாச்சாரத்தில் இருந்து வந்தது தான். இந்து மதத்தில் தான் நாம் இருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை வேறு கலாச்சாரத்தில் உள்ளனர். கலாச்சார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும்.
கமல்ஹாசன், ராகுல் காந்தி சந்திப்பு வரவேற்கக்கூடிய ஒன்று. கமல்ஹாசன் தேசிய உணர்வுடைய தலைவர், நல்ல மனம் படைத்தவர். சீர்திருத்த கருத்துகளை உடையவர்.
இன்றைய நிலையில் ராகுல் காந்தி போன்ற தலைவர் தான் இந்தியா போன்ற தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என உறுதியாக நம்புகிறார்.
அதனுடைய வெளிப்பாடு தான் அவருடன் அவர் நடைபயின்று உள்ளார். அவரோடு கருத்து பரிமாற்றத்தை செய்துள்ளார். ராகுல் காந்தி கமல்ஹாசன் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம், சாலை குடிநீர், மின்விளக்கு வசதி, நாய்களுக்கு கருத்தடை செய்ய நிதி ஒதுக்கீடு
- 215 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
வேலூர்:
வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு பச்சரிசி சர்க்கரை தொகுப்பு கரும்பு வழங்க ஆணையிட்ட முதல்அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வேலூர் மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை காலணிகள் வழங்குவது.
வேலூர் மாநகராட்சியில் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்வது, பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் புதிய சிறிய பாலங்கள் சீரமைத்தல் புதிய கால்வாய்கள் அமைப்பது போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது, வேலூர் கிரின்சர்க்கிள் பகுதியில் மேம்பாலங்களில் வர்ணம் தீட்ட நிதி ஒதுக்கீடு செய்வது, மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளில் புதிதாக எல் இ டி தெருவிளக்குகள் அமைப்பது மற்றும் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.290 முதல் 319 வரை வாடகை நிர்ணயம் செய்வது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் 1200 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது என்பது உள்ளிட்ட 215 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
- பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிக ளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி தொகுதிகளில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக உள்ளது.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 642 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 355 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 40 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 9713 பேர் அதிகம்.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்று குடியாத்தம் தாலுகா அலுவ லகத்தில் நடைபெற்றது.குடியாத்தம் தாசில்தார் எஸ். விஜயகுமார் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான புதிய இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார்.






