என் மலர்
வேலூர்
- பேரணாம்பாட்டு, மேல்பட்டி பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்
- குடியாத்தத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
குடியாத்தம்:
குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட குடியாத்தம், கே.வி. குப்பம், பேர்ணாம்பட்டு தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் எம்.வெங்க டராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வருவாய்த்துறை மின்வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைதுறை, நீர்வளத்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, உழவர் சந்தை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.
விவசாயிகள் பேசுகையில்:-
பேர்ணாம்பட்டு, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கரும்புகளை திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும், பேர்ணாம்பட்டு பகுதியில் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது யானைகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை விவசாயிகள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் இதுவரை வழக்கு ரத்து செய்யப்படவில்லை வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு புகுவது தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை தொடர்ந்து இதே போல் இருந்தால் விரைவில் முதல்வர் அலுவலகம் முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.கவுரப்பேட்டை ஏரிக்கரையை உயர்த்த வேண்டும் தண்ணீர் செல்லும் பகுதியே உடைப்பு ஏற்படுத்தி விட்டனர் இதனால் தண்ணீர் நிற்பதில்லை அதை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்
மேல்ஆலத்தூர் ெரயில்வே பாலத்தின் கீழ் அடிக்கடி தண்ணீர் தேங்கி பள்ளங்களாக உள்ளன உடனடியாக சீர் செய்ய வேண்டும் கூட நகரம் ரயில்வே மேம்பால பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்த குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இக்கூட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
- சத்துவாச்சாரி, மந்தவெளி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது
- பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சத்துவாச் சாரி மந்தைவெளி, காந்திநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைதிட்டம், தார்சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் நடை பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மந்தைவெளி மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே பாதாள சாக்கடை குழாய்கள் சரியான ஆழத்தில் புதைக்கப்படவில்லை. அதனால் சாலை அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது பாதாள சாக்கடைக்காக பதிக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாகவும், இதனை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் மாநகராட்சி மேயர் சுஜாதா அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில இடங்களில் குறிப்பிட்ட ஆழத்தில் குழாய்கள் பதிக்காமல் மேலோட்டமாக பதிக்கப்பட்டிருந்தது.
மேலும் வீட்டில் இருந்து பாதாள சாக்கடை குழாய்களுக்கு இணைப்புகொடுக் கப்படவில்லை. இதுதொடர்பாக மேயர் சுஜாதா, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர், பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுவ தும் முடித்த பின்னரே சாலை அமைக்க முடியும். எனவே அந்த பணிகளை எவ்வித குறைகளும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் சதீஷ்குமார் பாச்சி, உதவிபொறியாளர் செல்வ ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- போலீசார் வாகன தணிக்கையில் சிக்கியது
- 10 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்
அணைக்கட்டு:
வேலூரை அடுத்தபொய்கை பகுதியில் விரிஞ்சிபுரம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை யிட முயன்றனர்.
ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதையடுத்து போலீசார் கார் ஒன்றில் உடனடியாக அந்த காரை விரட்டி சென்றனர். போலீ சார் பின்தொடர்ந்து வரு வதை அறிந்த டிரைவர் வேக மாக சென்றார். ஆனால் போலீசார் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் விடாமல் துரத் தியதால் வடுகந்தாங்கல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே காரை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பியோடினார்.
சிறிதுநேரத்தில் அங்கு வந்த போலீசார் அந்த காரை திறந்து சோதனையிட்டதில் 20 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. காரில் ரேஷன் அரிசியை கடத்தி 'சென்றதால் டிரைவர் நிற்காமல் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், ரேஷன் அரிசியுடன் காரை பறிமு தல் செய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.இதுதொடர்பாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோ ம .டிய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.
- கலெக்டர் வேண்டுகோள்
- 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது
அடுக்கம்பாறை:
அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக் னிக் கல்லூரியில் வேலூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை மற்றும் புற்று மகரிஷி சேவா மையம் இணைந்து 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
வேலூர் ரோட்டரி சங்க தலைவர் திருமாறன், செயலாளர் சரவணன், வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிதுணை தலைவர் ஜனார்த்தனன், சித்த மருந்து தயாரிப்பு கூட்டுறவு நிறுவன இயக்குநர் பாஸ்கரன், வேலூர் மாவட்ட சித்த மருத் துவ அலுவலர் வெங்கடபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் தில்லைவாணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகை யில் கொரோனா தொற்று காலத்தில் சித்த மருத்துவம் மக்க ளுக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்றைக்கும் கிராமங் களில் இயற்கை சித்த மருத்துவத்தை பலர் அதிகம் பயன்ப டுத்துகின்றனர்.
சிலர் போலியாக சித்த மருத்துவர்கள் என கூறிக்கொண்டு சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது. தவ றான சிகிச்சையால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே மக்கள் போலியான சித்த மருத்துவர்களை நம்பி ஏமாற வேண் டாம் என்றார்.
முன்னதாக சித்த மருத்துவத்துறை சார்பில் வைக்கப்பட்டி' ருந்த சித்த மருத்துவ கண்காட்சியை கலெக்டர் பார்வையிட் டார். இதில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையின் இயற்கை மற்றும் யோகா மருத்துவத்துறை தலைவர் சஞ்சய்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விஜய் - அஜித் ரசிகர்களுக்கு போலீசார் திடீர் கட்டுப்பாடு
- வேலூரில் மோதலை தடுக்க நடவடிக்கை
வேலூர்:
பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு அஜித் நடிப்பில் துணிவு படங்கள் நாளை வெளியாகிறது. நள்ளிரவு ஒரு மணிக்கு அஜித் நடித்த துணிவு படம் வெளியிடப்படுகிறது.
இதனையொட்டி வேலூரில் அஜித், விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்துள்ளனர்.சினிமா படங்கள் வெற்றி பெற வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் வேலூர், காட்பாடி மாநகரப் பகுதிகளில் அஜித் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
வேலூரில் ஒரு சில தியேட்டர்களில் 2 படங்களும் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படங்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.
ஒரு சில தியேட்டர்களில் ரசிகர் மன்றங்கள் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றன.
வேலூரில் உள்ள விஜய் ரசிகர்கள் அலங்கார் தியேட்டரிலும், அஜித் ரசிகர்கள் காட்பாடி ஆஸ்கார் தியேட்டரிலும் சிறப்பு கொண்டாட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.
ரசிகர்களுக்காக நள்ளிரவு ஒரு மணிக்கு துணிவு 4 மணிக்கு வாரிசு படம் வெளியாவதால் அந்த தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரே தியேட்டரில் இரண்டு படங்கள் வெளியாகும் நேரத்தில் ரசிகர்களுக்கு இடையே மோதலை தவிர்க்கும் விதத்தில் பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
காட்சி தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே தியேட்டர் முன்பு கூட வேண்டும். பொறுமையுடன் அமைதியான முறையில் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்.
பல மணி நேரத்திற்கு முன்பாகவே தியேட்டர் முன்பு நின்று ஆரவாரம் செய்வது ஒருவருக்கொருவர் தாழ்த்தி பேசி கோஷங்களை எழுப்ப தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து மாறுவேடத்தில் போலீசார் கண்காணிக்க உள்ளனர். அத்துமீறும் ரசிகர்கள் மீது போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கணவர் தன்னை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்தை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் அரசு பஸ் டிரைவர் இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 27) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் முடிந்து 8 மாதங்கள் மட்டுமே சசிகலா கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதன் சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடைப்பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் சசிகலா நேற்று இரவு தன்கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என மேல்பள்ளிப்பட்டில் இருக்கும் அவரின் கணவர் வீட்டிற்கு சென்று என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பிரபாகரனின் பெற்றோர், கோர்ட்டில் வழக்கு முடிவுக்கு வரட்டும் அப்பறம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றனர். இதனால் அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுப்பட்டார். தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அப்பெண்ணிடம் பேசசுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
- துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.
- தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.
வேலூர்:
அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் சமீபகாலமாக பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் முடிவெட்டும்போது, தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் என புள்ளிங்கோ மாதிரி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற அலங்காரங்களை தவிர்த்து, பள்ளி சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற மாணவர்களுக்கு முடி அலங்காரம் செய்யக்கூடாது என வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் சிகை அலங்காரம் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமான கோணத்தில் வெட்டியும் கலர் அடித்தும் வருகின்றனர்.
அவர்களை பார்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி அவர்களை கண்டிப்பது அறிவுரை வழங்குவது என திகைத்துப்போய் நிற்கின்றனர்.
துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.
தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.
ஆனால் அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தட்டிகேட்கும் ஆசிரியர்களையும் முறைக்கும் அவல நிலையும் உள்ளது.
மாணவர்களை கண்டிக்க பயந்துபல ஆசிரியர்கள் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருக்கின்றனர். மேலும் இதுபோல சில மாணவர்களின் செயல்பாட்டால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆசிரியர்கள் கண்டிக்க கூடாது, அடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ள கல்வித்துறை இப்பேற்பட்ட மாணவர்களை எப்படி கையாள்வது அவர்களை எப்படி திருத்துவது என்பதை ஆசிரியர்களுக்கு போதிக்க வேண்டும்.
அல்லது சரியான கட்டுப்பாட்டு வழிமுறைகளை கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- ரேசன் கடைகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர்
- பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு நாளைக்கு 200 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர்.
டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி நேரம் அடிப்படையில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
முதல் நாளான இன்று அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து ரேசன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு செய்யக்கூடிய கருவி பழுதானது.
சர்வர் பிரச்சினை காரணமாக இந்த கருவிகள் அனைத்து ரேசன் கடைகளிலும் இயங்க வில்லை. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவி டப்பட்டது.
அதன்படி அனைத்து ரேசன் கடைகளிலும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- 108 ஆம்புலன்சு சேவை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் 108 ஆம்புலன்சு தொழிலா ளர்கள் சார்பில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு ஊழியர்களை அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக இடமாற்றம் செய்யக் கூடாது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் கல்லப்பாடி, கே. வி. குப்பம், டி.டி. மோட்டூர், பீஞ்ச மந்தை, வேலூர் டவுன் குடியாத்தம் பகுதியில் இரவு நேரங்களில் 108ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்படுவதில்லை.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் 108 ஆம்புலன் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். அனைத்து நேரங்களிலும் 108 ஆம்புலன்சு சேவை விரைவாக எளிதில் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அளித்த மனுவில்:-
ஆம்பூர், குடியாத்தம் செல்லும் அரசு பஸ்கள் கொணவட்டம் வழியாக சென்று வந்தன. புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஆம்பூர் குடியாத்தம் பஸ்கள் நேரடியாக பைபாஸ் வழியாக இயக்கப்படுகின்றன.
அந்த பஸ்கள் கொணவட்டம் வழியாக இயக்கப்படாததால் பொதுமக்கள் முதியோர்கள் அவதி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் ஆம்பூர், குடியாத்தம் செல்லும் பஸ்கள் கொணவட்டம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
- இன்று முதல் வினியோகம்
- குறைகள் இருந்தால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்
வேலூர்:
பொங்கல் பண்டிகையொட்டி அரிசி பெறும் ரேசன் அட்டைதாரார்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் முழு கரும்பு ஒன்றினையும் சேர்த்து. பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 49,554 அரிசி பெறும் ரேசன் அட்டைதாரர்களுக்கு அந்தந்த ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்த்து வழங்கிட ரேசன் கடைகளுக்கு 13-ந் தேதி (வெள்ளிகிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரே நேரத்தில் வழங்கப்படும்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் ரேசன் கடைகளில் சுழற்சி முறையில் தெரு வாரியாக நானொன்றுக்கு சுமார் 200 முதல் 250 டோக்கன் வழங்கி அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்காள அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை கலெக்டர் குமார வேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.
எவ்வித பதட்டமின்றி நெரிசல் ஏற்படாத வகையில் தங்களுக்குரிய ரேசன் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.
புகார் தெரிவிக்கலாம்
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.0415-2252566, மாவட்ட வருவாய் அலுவலர் 9445000004, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவ ாளர்.7335740600 மாவட்ட வழங்கல் அலுவலர் 944500084, கூட்டுறவு சார்பதிவாளர்கள், வேலூர் 9445000185,9344545267, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு
- 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரில் 6 சுற்றுகளாக நடைப்பெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 500-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று விளையாடினர்.
ஒடுகத்தூரில் செயல்பட்டு வரும் வின்னர் செஸ் அகடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்கம் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போடி யானது, மொத்தம் 6 சுற்றுகளாக நடைப்பெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வெளியேறும் வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொண்ட தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்க பணம் மற்றும் சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் நிகழ்ச்சியில் போட்டி யாளர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் திருவிழாப்போல் காட்சியளித்தது.
- தென்னிந்திய அளவிலான போட்டி குடியாத்தத்தில் நடந்தது
- பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் அணி முதலிடம் பெற்றது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்றது.
இந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச் சிறந்த 44 கபடி அணிகள் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 28 சிறந்த அணிகள் என மொத்தம் 72 அணிகள் பங்கேற்றன. 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளும் இந்த கபடி அணிகளில் புரோ கபடி லீக்கில் விளையாடிய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
இந்த தென்னிந்திய கபடி போட்டிகள் தொடக்க விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.
நேற்று காலையில் பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்ஏ. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமலு விஜயன் எம்.எல்ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், நகர் மன்ற தலைவர் சவுந்தரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா காசர்கோடு ஜேகே அகடமி, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகமும் மோதின பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கேரளா ஜேகே அகடமி அணி வெற்றி பெற்றது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பெற்றது பெங்களூர் மதராஸ் என்ஜினீயரிங் குரூப்ஸ் ராணுவ அணியும் அளந்தகரை ஏ டூ இசட் அணியும் கூட்டாக 3-ம் இடம் பெற்றது.
பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணி முதல் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் இரண்டாம் இடமும், மூன்றாம் இடம் கூட்டாக நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளம்பும் சென்னை சிட்டி போலீஸ் அணியும் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு குடியாத்தம் ஒன்றிய குழு துணை தலைவரும் ஊர் பெரிய தனக்காரமான அருண்முரளி தலைமை தாங்கினார்.ஊர் கவுண்டர் ராமன், தர்மகர்த்தா ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு, பார்த்திபன், சுரேஷ்குமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற கேரளா ஜிகே அகாடமி அணிக்கு ஒரு லட்ச ரூபாயும் கோப்பையும் வழங்கினார். 2-ம் இடம் பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிக்கு கோப்பையும் 75 ஆயிரம் வழங்கினார்.
பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அந்தியூர் சக்தி பிரதர் அணிக்கு 30 ஆயிரம் கோப்பையும் வழங்கினார்கள். மற்றும் கலந்து கொண்ட பரிசு பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்தனம், திமுக ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி, வேலூர் மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் பூஞ்சோலை சீனிவாசன், சீவூர்சேட்டு, ஞானசேகரன்உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கபடி கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர். தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகளை காண சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






