என் மலர்
வேலூர்
- வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
வேலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியானது.
தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் விஜய், அஜித் ரசிகர்களுக்காக அதிகாலை 1 மற்றும் 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. மார்கழி மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ரசிகர்கள் மேள, தாளத்துடன் படங்களை வரவேற்று கண்டு ரசித்தனர். வேலூர் மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகின.
பல தியேட்டர்களில் தலா 3 சிறப்பு காட்சிகள் வாரிசுக்கும், துணிவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தியேட்டருக்கு சென்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை பார்த்தனர்.
வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள், மேலாளர் மீது அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் சவுடேரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 60).நில அளவையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இவர் வேலூர் சத்துவாச்சாரிக்கு வந்திருந்தார்.
டபுள் ரோடு அருகே சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பைக்கில் வேகமாக வந்து எதிர்பாராத விதமாக பெருமாள் சாமி மீது மோதினார்.
இந்த விபத்தில் பெருமாள் சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பெருமாள் சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்துவாச்சாரி பகுதியில் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் நடந்தது
- டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு
வேலூர்:
வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்.இவரது வீட்டில் வளர்த்து வந்த 2 மாத கன்று குட்டி பிறவி குறைபாடு காரணமாக தொப்புள் கொடி பகுதியில் ஒரு பெரிய கட்டியுடன் பிறந்தது.
2 மாத கன்று குட்டி
இதனால் பிறந்ததிலிருந்தே சாணம் ஆசன வாய் வழியாக வெளிவராமல் தொப்புள்கொடி வழியாக வெளியேறியது. சரியாக உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது.
அதனை பரிசோதித்துப் பார்த்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் வயிற்றுப் பகுதியை திறந்து பார்த்தால் தான் என்ன பிரச்சனை என்று அறிய முடியும் என்று தெரிவித்தார். இதனையடுத்து வேலூர் அரசு கால்நடை பெரு மருத்துவமனையில் டாக்டர்கள் ரவிசங்கர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சை7
2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் பகுதி சீராக இல்லை என்பதும் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையாமல் இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குடல் பகுதியையும் ஒன்றாக இணைத்தனர்.
வெளியில் இருந்த சுமார் ஒரு கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கன்று குட்டி நல்ல நிலையிலும், ஆசனவாய் வழியாக சாணத்தை வெளியேற்றியது.
இந்த அரிய வகை பிறவி குறைபாடு நோயினை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் கன்று குட்டிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை விவசாயின் முகத்தில் புன்னகை தென்பட்டதோடு அவரது வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.
- பாலாறு, பொன்னையாறு பாலங்களின் தன்மை குறித்து ஆய்வு
- கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக தினமும் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு கோவை கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு இந்த வழியாக ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிக பட்சமாக ரெயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் வரை உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் வட மாநி லங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சில ரெயில்களில் வேகம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வரை ரெயில்களில் வேகத்தை 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரெயில் என்ஜின் மூலம் 145 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்ப ட்டது. இதில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு பொன்னை யாறு பாலங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் உள்ள ரெயில்களை அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். தற்போது இன்னும் அதி வேகமாக செல்லக்கூடிய ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் விரைவில் சென்னை சென்ட்ரல் முதல் ஜோலார்பேட்டை வரை ரெயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிவேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் போது பெங்களூர் கேரளா கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இன்னும் விரைவாக சென்றடைந்து விடும்.
மேலும் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்க முடியும். கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தொழில் போட்டியா? என போலீசார் சந்தேகம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள லத்தேரி அடுத்த பி. என். பாளையம் புதூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 41) தி.மு.க. பிரமுகரான இவர் பல ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது கம்பெனியை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் நாகேஷின் கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த நாகேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாகேசை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
லத்தேரி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட நாகேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையில் துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வகுப்பறையில் பாடம் நடத்தாமல் செல்போன் பார்ப்பதாக புகார்
- மாணவர்களின் பெற்றோர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மூலைகேட் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள் ளியில் மூலைகேட் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 205 மாணவ, மாண விகள் படித்து வருகின்ற னர். இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், 7 ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியல் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர் களுக்கு சரிவர பாடம் எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்டும் மாணவர் களை மேஜை விட்டு கீழே உட்கார வைக்கப்பட்டு வகுப்புகளை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை எனவும், வகுப்புகளில் ஆசிரியர்கள் செல்போன் பார்ப்பதாகவும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்களும் பள்ளி மேலாண்மை கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கூட் டம் என பல கூட்டங்களில் பலமுறை தெரிவித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்தும் புகார் அளித்துள்ளனர். புகார் கொடுத்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரை வில் 10-ம் வகுப்பு பொதுதேர் வுகள் வரவுள்ள நிலையில் பாடங்கள் நடத்தப்ப டாததால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எப்படி படிப்பது என்று பெரும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே சம்பந்தபட்ட ஆசி ரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று அரசு பள்ளி எதிரே மூலைகேட்- அணைக்கட்டு செல்லும் சாலையில் பள்ளி மாண வர்கள், பெற்றோருடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக் டர் கருணாகரன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ, மாண விகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.
தொடர்ந்து பள்ளிக் குள் இன்ஸ்பெக்டர் கரு ணாகரன் தலைமையில் பள்ளி மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த பள்ளியில் பணியாற் றும் ஆசிரியைகள் சரி வர பாடம் எடுப்பதில்லை, கேட்டால் எங்களை திட் டுகிறார்கள், தேர்வு தாள்களில் கேள்விகளை மட்டும் எழுத வைத்து விட்டு விடை களை ஆசிரியைகளே எழுதி திருத்தி அவர்களே மதிப் பெண்களை வழங்குகின்றனர் என சரமாரியாக ஆசிரியர்கள் மீது புகார்கள் கூறினர்.
இதையடுத்து பிரச்சினை அதிகமாகவே அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர் களை சமரசப்படுத்தி தனி யாக ஒரு அறையில் அமர வைத்து அவர்கள் தரப்பில் விசாரணை நடத்தினர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பெற்றோர்களிடம் விசா ரணை நடத்தியோது, எங் கள் பிள்ளைகள் தினந்தோ றும் பள்ளியில் ஆசிரியர்கள் செய்த பிரச்சினைகளை தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் உள்ள ஆசி ரியர்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடால் மாணவர்களை பழி வாங்கு கின்றனர். பள்ளியில் பாடம் நடத்துவதில்லை என கூறி செல்போன்களில் யூடியுப் மூலம் நடத்தும் பாடங் களை இரவில் வீட்டில் படிக்கின்றனர் என அவர் களும் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உங்கள் பிள்ளைகளின் படிப்பு கெடாமல் இருக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறு தியளித்தனர்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென் றனர். அதை தொடர்ந்து மாணவிகள், அவர்கள் பெற்றோர் வைத்த புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களி டம் தனித்தனியாக பெற் றோர், மாணவிகள் முன் னிலையில் விசாரணை நடத்தினர்.
இதில் நடத் திய விசாரணையில் இருத ரப்பிலுமே ஆசிரியர்கள் மீதே குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். அவர்கள் சமரசம் செய்து, சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்ப டும் என மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி எச்சரித்துவிட்டு சென்றார்.
மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழகத்தில் உள்ள ரெயில்களை அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும்.
- சோதனை ஓட்டத்தின்போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு பொன்னையாறு பாலங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வேலூர்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தினமும் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, கோவை கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு இந்த வழியாக ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக ரெயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் வரை உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சில ரெயில்களில் வேகம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வரை ரெயில்களில் வேகத்தை 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரெயில் என்ஜின் மூலம் 145 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சோதனை ஓட்டத்தின்போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு பொன்னையாறு பாலங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் உள்ள ரெயில்களை அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். தற்போது இன்னும் அதிவேகமாக செல்லக்கூடிய ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் விரைவில் சென்னை சென்ட்ரல் முதல் ஜோலார்பேட்டை வரை ரெயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிவேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்போது பெங்களூரு, கேரளா கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இன்னும் விரைவாக சென்றடைந்து விடும்.
மேலும் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்க முடியும்.கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேந்தர் விசுவநாதன் பேச்சு
- வி.ஐ.டி.யில் பொங்கல் விழா நடந்தது
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியம் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொங்கல் விழாவை யொட்டி நையாண்டி மேளம், கரகாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையடுத்து விஐடி வேளாண் துறை சார்பில் நிலத்தடி நீர் மேலாண்மை காய்கறி சாகுபடி நிலக்கடலை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சார்பில் விவசாயிகளுக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் கையேடுகளை வழங்கினார்.
மேலும் பண்ணை பணியாளர்களுக்கு பண முடிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்
இதையடுத்து வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-
3000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய முன்னோர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பூங்குன்றனார் எழுதிய வரிகளுக்கேற்ப தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர்.
உலக மக்களோடு தமிழர்களுக்கு நல்ல உறவு உள்ளது. உலகத்தில் 7100 மொழிகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் சீன மொழியும் ஐரோப்பியாவில் கிரேக்க மொழி உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே தற்போது உள்ளன.
ஆனால் 2,3 ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் தமிழ் மொழி தற்போது இளமையோடு உள்ளது. அந்த மொழிக்கு சொந்தக்காரர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
தமிழர்கள் வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லவர்களாக இருப்பதற்கு திருக்குறள் ஒரு ஆதாரம். வல்லவர்களாக இருப்பதற்கு கடுமையான உழைப்பு உதாரணம். நல்ல அரசு இருந்தால் வல்லவர்களாக வர முடியும்.
தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்.
ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இந்த விழாவில் தமிழர்கள் மட்டும் இன்றி வெளி மாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மேளம் தாளம் முழங்க விஐடி வேந்தர் விசுவநாதன் துணைவேந்தர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர்.
அதை தொடர்ந்து பொங்கல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வேட்டி சட்டை அணிந்தும் சேலை அணிந்தும் தங்கள் மாநில பாரம்பரிய உடைகள் அணிந்து வந்து இருந்தனர். நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்ப மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
- ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது
- காணும் பொங்கல் அன்று நடைபெறும் சந்தைக்கு பதிலாக 14-ந்தேதி நடத்த ஏற்பாடு
வேலூர்:
வேலூர் சூளைமேடு பகுதியில் பொங்கல் பானை தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள சில குடும்பத்தினர் மட்டும் தலைமுறை, தலைமுறைகளாக பானை மற்றும் அது சார்ந்த பொருட்களை தயாரித்து உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் சித்தூர், பலமநேர், பாகாலா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக நொடிந்து போயிருந்த பானை தொழில் தற்போது மீண்டும் நல்ல முறையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு மண் பானைகளை அதிகம் வாங்க ஆரம்பித்ததே காரணம் என கூறுப்படுகிறது.
இது தொடர்பாக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மண் பானை தொழிலாளி சேகர் கூறும்போது, ''பொங்கல் பானை கடந்தாண்டை விட இந்தாண்டு சற்று விலை உயர்ந்துள்ளது. அரை கிலோ, ஒரு கிலோ பச்சரிசி பொங்கல் வைக்கும் அளவுக்கான பானைகள் அதிகளவில் விற்பனையாகிறது. இந்த வகை பானைகள் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையான பானைகள் நகர்புறங்களில் அதிகமாக விற்பனையாகும்.
கிராமங்களில் 5 கிலோ அளவு பெரிய பானைகளில் சிலர் பொங்கல் வைப்பார்கள். இதற்காக, குறைந்தளவு பானைகள் தயாராகிறது.
இந்த பானைகள் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. பொங்கல் பானையுடன் அதற்கான மூடியும் சேர்ந்து விற்பனை செய்யப்படுவது எங்களுக்கு கூடுதல் லாபமாக இருக்கிறது. தினசரி குறைந்தபட்சம் 50 பானைகளாவது விற்று விடுகிறோம்'' என தெரிவித்தார்.
அதேநேரம், சமையல் தொடர்பான வீடியோக்கள், ரீல்ஸ்களால் சட்டி, பானைகள் விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மண் சட்டிகளில் சமையல், பானைகளில் உணவு தயாரிப்பு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதால் தங்களது தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
''இப்போதெல்லாம் சட்டி பிரியாணி, தந்தூரி டீ சொப்புகள், மீன் சட்டி தயாரிப்புக்கு அதிக ஆர்டர் வருகிறது. குழந்தைகளுக்கான சிறிய சொப்புகள், உண்டியல்கள் விற்பனையும் இப்போது அதிகரித்து வருகிறது.
வீடுகளில் அலங்காரத்துக்காக தொங்கவிடும் லவ் பேர்ட்ஸ் தயாரிப்பும் அதிகமாக செய்து வருகிறோம். மக்கள் மனம் மாறியிருப்பதால் எங்கள் தொழில் காப்பாற்றப்பட்டுள்ளது'' என்றார்.
பொய்கையில் மாட்டு சந்தை
வேலூர் அடுத்துள்ள பொய்கையில் மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும்.
வேலூர் மாவட்டத்தின் மிகவும் பிரபலமான மாட்டு சந்தையாக பொய்கை கருதப்படுவதால் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான எருது மாடுகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
அதிகாலை 4 மணியளவில் இருந்தே சந்தை களைகட்டத் தொடங்கி விடும். மேலும், கால்நடைகளுக்கு தேவையான கயிறு, சலங்கைகள் விற்பனையும் காய்கறிகள், ஆடு, கோழி விற்பனையும் இருக்கும்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பொய்கை சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தன. இதனால், வழக்கமான வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பெரிதும் கவலையடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் மாடுகளுக்கான நோய்த்தாக்குதல் காரணமாக விற்பனைக்கான மாடுகள் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
உள்ளூர் அளவிலும் மாடுகள் விற்பனைக்கு வருவது கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. வேலூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் மாடுகள் வளர்ப்பும் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கூறுகின்றனர். பொய்கை மாட்டு சந்தையில் விற்பனைக்கான மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும் நேற்று பிற்பகல் நிலவரப்படி சுமார் ரூ.1 கோடி மதிப்புக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (17- ந் தேதி) காணும் பொங்கல் அன்று சந்தைக்கு பதிலாக வரும் 14-ந்தேதி சந்தை நடத்தவுள்ளனர். பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் சந்தையில் அன்றைய தினம் அதிக மாடுகள் விற்பனையாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.
- வேலூரில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்
- விழா நடக்கும் பகுதிகளில் கிணறுகளை மூட உத்தரவு
வேலூர்:
எருதுவிடும் திருவிழாவில் கால் முறிவு ஏற்பட்ட மாட்டுக்கு 4 வகையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. விவசாயி. இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த மாடு எருது விடும் திருவிழாவுக்காக தயார் படுத்தி வந்தார்.
பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல்பரிசை வென்றுள்ளது. எனவே அந்த காளைக்கு வெள்ளகுட்டை பைபாஸ் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பெத்தூர் என்ற பகுதியில் சமீபத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடியது. அதில் முதல்பரிசை வென்றது. ஆனால் மாடு ஓடியபோது திடீரென காளையின் கால் முறிந்து எலும்பு இரண்டு துண்டாகியது.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காளையை வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
மாட்டினை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி டாக்டர் நாசர் தலைமையில் டாக்டர் ரவிசங்கர் மற்றும் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
காளையின் காலில் இரும்பு ராடு மற்றும் பிளேட் ஆகியவை அறுவை சிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டது. மேலும் கால் நரம்பு சிதைவு ஏற்பட்டிருந்ததால் அதற்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
4 வகையான அறுவை சிகிச்சை
இதுதவிர, கால் பகுதியில் சதைகள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் தொடையில் இருந்து சதைகள் எடுத்து காலில் பொருத்தி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த காளைக்கு மேற்கொள்ளப்பட்ட 4 வகை அறுவை சிகிச்சையும் முதன் முதலாக புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கிணறுகளை மூட உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
78 இடங்களில் விழாக்கள் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 43 கிராமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதேவேளையில் விழா நடத்தும் விழாக்குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு விழா நடத்துவதில் விழாக்குழுவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது விடும் திருவிழாக்களில் ஓடிய காளைகள் பல கிலோ மீட்டர் சீறியபடி ஓடின.
இதனால் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மீது மோதுவது, கீழே விழுந்து மாடுகள் காயமடைவது, கிணற்றுக்குள் மாடுகள் தவறி உள்ளே விழுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. கிணற்றுக்குள் விழுந்த மாடுகளை மீட்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின. எனவே இந்தாண்டு புதிதாக விழா நடைபெறும் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள கிணறுகள் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விழாவில் துள்ளிவரும் காளைகள் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுவதை தடுக்கவும், மதுபோதையில் இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுவதை தடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறந்த வெளி கிணறுகளை கம்புகள் அல்லது இரும்பு கம்பிகள் கொண்டு தற்காலிகமாக மூடி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
- தற்காலிகமாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நலன்கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி முதுகலைபட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் வருகிற 13-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சுமார் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் பணிகள் காலியாக உள்ள பள்ளிகள் விவரம், பாட விவரம் குறித்த விவரங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் ராஜாகோயில் குட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் காரியமேடை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்பகுதியில் காரியமேடை கட்டக்கூடாது எனவும் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இங்கு காரியமேடை கட்டப்பட்டால் பலருக்கும் சவுகரியமாக இருக்கும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து காரியமேடை கட்டும் பணி தடைப்பட்டது.
பிரச்சினை குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர். திருமலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மேலாளர் அசோக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சோபன்பாபு ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், துணைத்தலைவர் ராஜாத்திதமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி துணை தலைவர் காந்திபிரசாத், ஊராட்சி மன்ற உறுப்பினர் காந்தி, கிராம நிர்வாக அலுவலர் ரகு உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஒரு தரப்பினர் அதே இடத்தில் காரியமேடை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர் மற்றொரு தரப்பினர் அப்பகுதியில் காரியமேடை கட்டக்கூடாது என வலியுறுத்தினர் இதனால் சுமூக முடிவு ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில் இப் பிரசசினை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு காரியமேடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.






