என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மாத கன்று குட்டிக்கு அரிய வகை அறுவை சிகிச்சை
    X

    2 மாத கன்று குட்டிக்கு அரிய வகை அறுவை சிகிச்சை

    • வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் நடந்தது
    • டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்.இவரது வீட்டில் வளர்த்து வந்த 2 மாத கன்று குட்டி பிறவி குறைபாடு காரணமாக தொப்புள் கொடி பகுதியில் ஒரு பெரிய கட்டியுடன் பிறந்தது.

    2 மாத கன்று குட்டி

    இதனால் பிறந்ததிலிருந்தே சாணம் ஆசன வாய் வழியாக வெளிவராமல் தொப்புள்கொடி வழியாக வெளியேறியது. சரியாக உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது.

    அதனை பரிசோதித்துப் பார்த்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் வயிற்றுப் பகுதியை திறந்து பார்த்தால் தான் என்ன பிரச்சனை என்று அறிய முடியும் என்று தெரிவித்தார். இதனையடுத்து வேலூர் அரசு கால்நடை பெரு மருத்துவமனையில் டாக்டர்கள் ரவிசங்கர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர்.

    அறுவை சிகிச்சை7

    2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் பகுதி சீராக இல்லை என்பதும் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையாமல் இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குடல் பகுதியையும் ஒன்றாக இணைத்தனர்.

    வெளியில் இருந்த சுமார் ஒரு கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கன்று குட்டி நல்ல நிலையிலும், ஆசனவாய் வழியாக சாணத்தை வெளியேற்றியது.

    இந்த அரிய வகை பிறவி குறைபாடு நோயினை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் கன்று குட்டிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை விவசாயின் முகத்தில் புன்னகை தென்பட்டதோடு அவரது வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது.

    இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×