என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மோதி நில அளவையர் பலி
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் சவுடேரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 60).நில அளவையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இவர் வேலூர் சத்துவாச்சாரிக்கு வந்திருந்தார்.
டபுள் ரோடு அருகே சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பைக்கில் வேகமாக வந்து எதிர்பாராத விதமாக பெருமாள் சாமி மீது மோதினார்.
இந்த விபத்தில் பெருமாள் சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பெருமாள் சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்துவாச்சாரி பகுதியில் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






