என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம்"

    • தற்காலிகமாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நலன்கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    அதன்படி முதுகலைபட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் வருகிற 13-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    சுமார் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பணிகள் காலியாக உள்ள பள்ளிகள் விவரம், பாட விவரம் குறித்த விவரங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×