என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடியவர்களை படத்தில் காணலாம்.
மாநில அளவிலான செஸ் போட்டியில் 500 வீரர்கள் பங்கேற்பு
- 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு
- 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரில் 6 சுற்றுகளாக நடைப்பெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 500-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று விளையாடினர்.
ஒடுகத்தூரில் செயல்பட்டு வரும் வின்னர் செஸ் அகடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்கம் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போடி யானது, மொத்தம் 6 சுற்றுகளாக நடைப்பெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வெளியேறும் வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொண்ட தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்க பணம் மற்றும் சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் நிகழ்ச்சியில் போட்டி யாளர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் திருவிழாப்போல் காட்சியளித்தது.






