என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudiatham Bus"

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • 108 ஆம்புலன்சு சேவை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் 108 ஆம்புலன்சு தொழிலா ளர்கள் சார்பில் மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு ஊழியர்களை அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக இடமாற்றம் செய்யக் கூடாது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    வேலூர் மாவட்டத்தில் கல்லப்பாடி, கே. வி. குப்பம், டி.டி. மோட்டூர், பீஞ்ச மந்தை, வேலூர் டவுன் குடியாத்தம் பகுதியில் இரவு நேரங்களில் 108ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்படுவதில்லை.

    இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் 108 ஆம்புலன் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். அனைத்து நேரங்களிலும் 108 ஆம்புலன்சு சேவை விரைவாக எளிதில் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அளித்த மனுவில்:-

    ஆம்பூர், குடியாத்தம் செல்லும் அரசு பஸ்கள் கொணவட்டம் வழியாக சென்று வந்தன. புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஆம்பூர் குடியாத்தம் பஸ்கள் நேரடியாக பைபாஸ் வழியாக இயக்கப்படுகின்றன.

    அந்த பஸ்கள் கொணவட்டம் வழியாக இயக்கப்படாததால் பொதுமக்கள் முதியோர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் ஆம்பூர், குடியாத்தம் செல்லும் பஸ்கள் கொணவட்டம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    ×