search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore Municipal Corporation Meeting"

    • புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம், சாலை குடிநீர், மின்விளக்கு வசதி, நாய்களுக்கு கருத்தடை செய்ய நிதி ஒதுக்கீடு
    • 215 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    இதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு பச்சரிசி சர்க்கரை தொகுப்பு கரும்பு வழங்க ஆணையிட்ட முதல்அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வேலூர் மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை காலணிகள் வழங்குவது.

    வேலூர் மாநகராட்சியில் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்வது, பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் புதிய சிறிய பாலங்கள் சீரமைத்தல் புதிய கால்வாய்கள் அமைப்பது போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது, வேலூர் கிரின்சர்க்கிள் பகுதியில் மேம்பாலங்களில் வர்ணம் தீட்ட நிதி ஒதுக்கீடு செய்வது, மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளில் புதிதாக எல் இ டி தெருவிளக்குகள் அமைப்பது மற்றும் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.290 முதல் 319 வரை வாடகை நிர்ணயம் செய்வது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் 1200 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது என்பது உள்ளிட்ட 215 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • 4 மண்டலங்களிலும் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு
    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் அசோக்குமார் துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்வது மேலும் குடிநீர் குழாய்களை சீரமைப்பது கால்வாய் பணிகளை துரித படுத்த நடவடிக்கை எடுப்பது என்பது உள்பட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×